சிறப்புக் கட்டுரைகள்

சிதம்பரம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தின் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் சட்டப்பேரவைத் தொகுதிகளுடன், அரியலூர் மாவட்டத்தின் அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளையும், பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் தொகுதியையும் இணைத்து 2009-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தொகுதி சிதம்பரம். தமிழகத்தில் நீண்டகாலமாக தனித் தொகுதியாக இருக்கும் தொகுதிகளில் சிதம்பரமும் ஒன்று.

இந்தத் தொகுதியில் இடம்பெற்றிருந்த சட்டப்பேரவைத் தொகுதிகள் பலவும் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு இடம் பெயர்ந்துள்ளன. ஸ்ரீநடராஜர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயம், பிச்சாவரம் சுற்றுலா மையம், வீராணம் ஏரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்று புகழ்பெற்ற இடங்கள் கொண்டது இதன் தனிச்சிறப்பு.

நெல், கரும்பு, முந்திரி, சோளம், பருத்தி, மிளகாய் ஆகிய பயிர்கள் அதிக அளவில் விளைகின்றன. விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் தொகுதி. சிமென்ட் தொழிற்சாலைகள், தனியார் கரும்பாலை ஆகியவை இந்தத் தொகுதியின் பொருளாதாரத்தைக் கட்டமைக்கின்றன.இவற்றைத் தவிர வேறு பிரதான தொழிற்சாலைகள் எதுவும் இந்தத் தொகுதியில் இல்லை.

கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் பலமுறை காங்கிரஸ் இங்கு வென்றுள்ளது. இருப்பினும் திமுக, அதிமுகவுக்கு கணிசமான வாக்கு வாங்கி உள்ளது. இதைத் தவிர பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கும் இங்கு வாக்கு வங்கி உண்டு.சிதம்பரம் தொகுதியில் ஏற்கெனவே நான்கு முறை போட்டியிட்ட விசிக தலைவர் தொல்.திருமாவளவன், 2019-ம் ஆண்டு தேர்தலில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸின் வள்ளல் பெருமான், பாமகவின் தலித் எழில்மலை, பொன்னுசாமி ஆகியோரும் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட தொகுதி சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

• சிதம்பரம்
• காட்டுமன்னார் கோவில் (தனி)
• புவனகிரி
• அரியலூர்
• ஜெயங்கொண்டம்
• குன்னம்

சிதம்பரம் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,10,915
• ஆண் வாக்காளர்கள்: 7,49,623
• பெண் வாக்காளர்கள்: 7,61,206
• மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 86

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:

ஆண்டு
வெற்றி பெற்றவர்

2-ம் இடம் பிடித்தவர்
1971 மாயவன், திமுக
இளையபெருமாள், ஸ்தாபன காங்

1977
முருகேசன், அதிமுக ராஜாங்கம், திமுக

1980
குழந்தைவேலு, திமுக
மகாலிங்கம், சிபிஎம்

1984

வள்ளல் பெருமான், காங்
கண்ணபிரான், திமுக
1989
வள்ளல் பெருமான், காங்
அய்யசாமி, திமுக
1991
வள்ளல் பெருமான், காங்

சுலோச்சனா அய்யாசாமி, திமுக
1996
கணேசன், திமுக
தலித் எழில்மலை, பாமக
1998 தலித் எழில்மலை, பாமக
கணேசன், திமுக
1999 பொன்னுசாமி, பாமக
திருமாவளவன், தமாகா கூட்டணி
2004 பொன்னுசாமி, பாமக
திருமாவளவன், விசிக
2009
திருமாவளவன், விசிக
பொன்னுசாமி, பாமக
2014
சந்திரகாசி, அதிமுக
திருமாவளவன், விசிக
2019
திருமாவளவன், விசிக

சந்திரசேகர் P, அதிமுக

2019-ம் ஆண்டு சிதம்பரம் மக்களவைத் தேர்தலின் நிலவரம்:


2024-ம் ஆண்டு சிதம்பரம் மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

SCROLL FOR NEXT