சிறப்புக் கட்டுரைகள்

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சியில் உள்ள ஆலந்தூர் பகுதியையும் சென்னை புறநகர் பகுதிகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட தொகுதி ஸ்ரீபெரும்புதூர். தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதிகளில் ஒன்று. கார் உற்பத்தி உட்பட பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ள தொகுதி இது. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர் பகுதிகளில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதனால் தொழிலாளர்கள், பணியாளர்கள் நிறைந்த தொகுதியாக உள்ளது.

தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் தங்கி பணியாற்றுகின்றனர். நீண்டகாலமாக தனித் தொகுதியாக இருந்த இந்தத் தொகுதி, மறுசீரமைப்புக்குப் பிறகு பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டடது. காங்கிரஸ் கட்சியின் மரகதம் சந்திரசேகர் உட்பட அதிகமுறை பெண்கள் இங்கு களம் கண்டுள்ளனர். மரகதம் சந்திரசேகர் 3 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

⦁ ஆலந்தூர்
⦁ பல்லாவரம்
⦁ தாம்பரம்
⦁ ஸ்ரீபெரும்புதூர் (எஸ்சி)
⦁ மதுரவாயல்
⦁ அம்பத்தூர்

ஸ்ரீ பெரும்புதூர் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 23,58,526
ஆண் வாக்காளர்கள்: 11,69,344
பெண் வாக்காளர்கள்: 11,88,754
மூன்றாம் பாலின வாக்காளர்கள்:428

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:

ஆண்டு வெற்றி பெற்றவர் 2ம் இடம் பெற்றவர்
1971 லட்சுமணன், திமுக கக்கன், ஸ்தாபன காங்
1977 ஜெகநாதன், அதிமுக ஏழுமலை, ஸ்தாபன காங்
1980 நாகரத்தினம், திமுக ஜெகநாதன், அதிமுக
1984 மரகதம் சந்திரசேகர், காங் நாகரத்தினம், திமுக
1989 மரகதம் சந்திரசேகர், காங் கணேசன், திமுக
1991 மரகதம் சந்திரசேகர், காங் சுந்தரம், திமுக
1996 நாகரத்தினம், திமுக லதா பிரியகுமார், காங்
1998 வேணுகோபால், அதிமுக நாகரத்தினம், திமுக
1999 கிருஷ்ணசாமி, திமுக வேணுகோபால், அதிமுக
2004 கிருஷ்ணசாமி, திமுக வேணுகோபால், அதிமுக
2009 டி.ஆர்.பாலு, திமுக ஏ.கே.மூர்த்தி, பாமக
2014 கே.என்.ராமச்சந்திரன், அதிமுக ஜெகத்ரட்சகன், திமுக
2019 T. R. பாலு, திமுக A. வைத்திலிங்கம், பாமக

ஸ்ரீ பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக 7 முறையும், காங்கிரஸ் மற்றும் அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.


2019-ம் ஆண்டு ஸ்ரீ பெரும்புதூர் மக்களவைத் தொகுதி நிலவரம்:

2024-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்:

SCROLL FOR NEXT