சிறப்புக் கட்டுரைகள்

தென் சென்னை மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

செய்திப்பிரிவு

தியாகராய நகர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது தென் சென்னை மக்களவைத் தொகுதி. மத்திய அரசின் முதல் நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா, முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் என மிகப் பெரிய ஆளுமைகள் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி இது.

1951-ல் நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் ‘மெட்ராஸ்’ தொகுதியில் தென் சென்னையும் அடங்கியிருந்தது. தொகுதி மறுசீரமைப்புக்குப் பின், தென் சென்னை தொகுதியில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் தொகுதிகள் இணைக்கப்பட்டன. இதில், தமிழகத்தின் அதிக வாக்காளர்களைக் கொண்டது சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இத்தொகுதியில் அமைந்துள்ளன. இந்தத் தொகுதியில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம். பழமை வாய்ந்த கோயில்கள், சுற்றுலாப் பகுதிகள், பிரபலமான கல்வி நிறுவனங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது இந்தத் தொகுதி. அதிகளவில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட தொகுதி. வெளிமாநிலத்தவர், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் வசிக்கின்றனர்.

ஒரு சுவாரஸ்யம்: இத்தொகுதி உருவாகி, 34 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் 1991 மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக அதிமுக வெற்றியை ருசித்தது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஆர்.ஸ்ரீதரன் வெற்றிபெற்று மக்களவை உறுப்பினரானார். இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

⦁ விருகம்பாக்கம்
⦁ சைதாப்பேட்டை
⦁ தியாகராய நகர்
⦁ மயிலாப்பூர்
⦁ வேளச்சேரி
⦁ சோழிங்கநல்லூர்

தென்சென்னை தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 20,07,816
ஆண் வாக்காளர்கள்: 9,93,590
பெண் வாக்காளர்கள்: 10,13,772
மூன்றாம் பாலின வாக்காளர்கள்:454

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:

ஆண்டு வெற்றி பெற்றவர் 2-ம் இடம் பிடித்தவர்
1971 முரசொலி மாறன், திமுக நரசிம்மன், சுவராஜ்ய கட்சி
1977 வெங்கடராமன். R, காங்கிரஸ் முரசொலி மாறன், திமுக
1980 வெங்கடராமன் R, காங்கிரஸ் சுலோச்சனா சம்பத் E.V. K., அதிமுக
1984 வைஜெயந்திமாலா, காங்கிரஸ் இரா செழியன், ஜனதா கட்சி
1989 வை ஜெயந்திமாலா, காங்கிரஸ் ஆலடி அருணா, திமுக
1991 ஆர். ஸ்ரீதரன், அதிமுக த. ரா. பாலு, திமுக
1996 டி.ஆர். பாலு, திமுக எச். கணேசம், அதிமுக
1998 டி.ஆர். பாலு, திமுக K. ஜனா கிருஷ்ணமூர்த்தி, பாஜக
1999 டி.ஆர். பாலு, திமுக V. தண்டாயுதபாணி, காங்கிரசு
2004 டி.ஆர். பாலு, திமுக பதர் சயீது, அதிமுக
2009 சி. ராஜேந்திரன், அதிமுக ஆர். எஸ். பாரதி, திமுக
2014 DR. ஜெ.ஜெயவர்தன், அதிமுக டி. கே. எஸ். இளங்கோவன், திமுக
2019 தமிழச்சி தங்கப்பாண்டியன், திமுக DR. ஜெ.ஜெயவர்தன், அதிமுக

அதிகம் வெற்றி பெற்றவர்கள்: தென் சென்னை மக்களவைத் தொகுதி பெரும்பாலும் திமுக, காங்கிரஸ் வசமே அதிக முறை இருந்துள்ளது. திமுக 8 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றிபெற்றுள்ளது.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு தென்சென்னை மக்களவைத் தொகுதி போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்:

SCROLL FOR NEXT