கருத்துப் பேழை

360: டி.எம்.கிருஷ்ணா நூல் வெளியீட்டு விழா

செய்திப்பிரிவு

கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கர்னாடக இசை தொடர்பாக எழுதிய இரண்டு ஆங்கில நூல்கள் ‘மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள்: செபாஸ்டியன் குடும்பக் கலை’, ‘கர்னாடக இசையின் கதை’ ஆகிய தலைப்புகளில் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான டி.ஐ.அரவிந்தனால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த நூல்களைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்த நூல்களின் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள ராகசுதா அரங்கத்தில் நடைபெறுகிறது. டி.எம்.கிருஷ்ணா, டி.ஐ.அரவிந்தன், கவிஞர் சுகுமாரன், சமூகச் செயல்பாட்டாளர் சன்னி எம்.கப்பிக்காடு, பரதநாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ், இதழியர் பி.கோலப்பன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். இறுதியில் இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

SCROLL FOR NEXT