இலக்கியம்

சென்னை தினம் - கட்டுரைப் போட்டி | திண்ணை

செய்திப்பிரிவு

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறு​வனம் (MIDS) சார்​பில் ‘சென்னை தினம் 2026’ முன்​னிட்டு தமிழ் மற்​றும் ஆங்​கில மொழிகளில் கட்​டுரைப் போட்டி நடத்​தப்​படு​கிறது. சென்​னை​யின் வரலாறு, பாரம்​பரி​யம், பண்​பாடு மற்​றும் நகர வளர்ச்சி தொடர்​பான தலைப்​பு​களில் மாணவர்​கள் தங்​களது சொந்​தக் கட்​டுரைகளை சமர்ப்​பிக்​கலாம்.

கட்​டுரைகள் ஆகஸ்ட் 14க்​குள் Google Form மூலம் அனுப்​பப்பட வேண்​டும். வெற்​றி​யாளர்​கள் ஆகஸ்ட் 19 அன்று அறிவிக்​கப்​படு​வார்​கள். பரிசளிப்பு விழா ஆகஸ்ட் 22 அன்று MIDS வளாகத்​தில் நடை​பெறும். மேலும் விவரங்​களுக்​கு: 91509 44464

ஹைக்கூ முற்​றம்: ஹைக்கூ முற்​றம் இரண்​டாம் ஆண்டு தொடக்க விழா மற்​றும் ஹைக்கூ கவிதைத் தொகுப்பு வெளி​யீட்டு விழா சென்னை கோட்​டூர்​புரம் அண்ணா நூற்​றாண்டு நூலக வளாகத்​தில் இன்று (ஞா​யிற்​றுக்​கிழமை) காலை 10 மணிக்கு நடை​பெறுகிறது. கவிஞர் ஆழ்​வார்​குறிச்சி ப.சொக்​கலிங்​கம் தலை​மை​யில் நடை​பெறும் இவ்​விழா​வில், மேனாள் தலை​மைச் செய​லா​ளர் வெ.இறையன்​பு, கவிஞர் மற்​றும் இயக்​குநர் என்​.லிங்​கு​சாமி, கவிஞர் கவி​முகில் உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​கின்​றனர்​.

SCROLL FOR NEXT