இலக்கியம்

பஞ்சு பரிசில் 2026 | திண்ணை

செய்திப்பிரிவு

தமிழியல் திறனாய்வுலகில் குறிப்பிடத்தக்கவரான பேராசிரியர் முனைவர் க.பஞ்சாங்கம் பெயராலமைந்த ‘பஞ்சு பரிசில் 2026’ விருதுக்கான தேர்வில் பங்கேற்க நூல்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருது ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை கொண்டதாகும்.

இலக்கியம், இலக்கணம், மொழியியல், வரலாறு, நுண்கலைகள், தொல்லியல், நாட்டுப்புறவியல், மானுடவியல் சார்ந்த திறனாய்வு மற்றும் ஆய்வு நூல்களின் ஒரு பிரதி மட்டும் அனுப்ப வேண்டும். 2026 ஜனவரி முதல் வெளியான நூல்களை மட்டும் பாரதிபுத்திரன், பஞ்சு பரிசில் குழு, 10, 4ஆம் குறுக்குத் தெரு, துர்கா காலனி, செம்பாக்கம், சென்னை - 600073 என்ற முகவரிக்கு 31-01-2027க்கு முன் அனுப்பி வைக்க வேண்டும். பேராசிரியர் க.பஞ்சாங்கம் பிறந்தநாளையொட்டி, 2027 பிப்ரவரியில் புதுச்சேரியில் பரிசளிப்பு விழா நடைபெறும். மேலும் விவரங்களுக்கு: 94442 34511.

நூல் வெளியீட்டு விழா: டாக்டர் கு.கணேசன் எழுதிய ‘தூக்கம் ஒரு வரம்’ என்ற நூல் வெளியீட்டு விழா, ராஜபாளையம்  ரமணக் குழுமப் பள்ளிகள் வளாகத்தில் நவம்பர் 20 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இந்து தமிழ் திசைப் பதிப்பகத்தின் இந்நூலை, சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் வெளியிட்டுச் சிறப்புரை நிகழ்த்துகிறார். இந்நூல் குறித்து டாக்டர் த.அறம், எழுத்தாளர் கண்மணி ராசா, ஆசிரியர் அ.தனலட்சுமி உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். நிறைவாக நூலாசிரியர் டாக்டர் கு.கணேசன் ஏற்புரையாற்றுகிறார்.

‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு: அமெரிக்கத் தமிழர்களின் ‘விளக்கு’ இலக்கிய அமைப்பின் 30வது (2025) ஆண்டின் ‘புதுமைப்பித்தன் நினைவு’ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புனைவிலக்கியம் பிரிவில் சுரேஷ்குமார இந்திரஜித், புனைவிலி இலக்கியம் பிரிவில் தியடோர் சு. பாஸ்கரன், கலைப் பிரிவில் வெளி ரங்கராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலா ரூ.1,50,000 மதிப்புள்ள இவ்விருதுகள் வழங்கும் விழா பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று விருதுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT