'எழுதுக' புத்தகம் எழுதும் இயக்கம் சார்பில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில், கண்ணகி நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எழுதிய 50 நூல்களை முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்டார். அருகில் நியூ செஞ்சுரி பதிப்பகத்தின் மேலாண் இயக்குநர் சந்தானம், இளைஞர் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ராஜா, கண்ணகி நகர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தீஸ்வரி உள்ளிட்டோர் உள்ளனர். | படம்: ம.பிரபு |

 
இலக்கியம்

புத்தகம் எழுதும் இயக்கம் சார்பில் கண்ணகி நகர் அரசு பள்ளி மாணவர்கள் எழுதிய 50 நூல்கள்: வெ.இறையன்பு வெளியிட்டார்

செய்திப்பிரிவு

சென்னை: கண்​ணகி நகர் அரசு மேல்​நிலைப்​பள்ளி மாணவர்​கள் எழு​திய 50 நூல்​களை அண்ணா நூற்​றாண்டு நூல​கத்​தில் முன்​னாள் தலை​மைச் செயலர் வெ.இறையன்பு நேற்று வெளி​யிட்டார்.

சென்​னை​யில் பின்​தங்​கிய பகு​தி​களுள் ஒன்​றாகக் கருதப்​படும் கண்​ணகி நகரில் பள்ளி மாணவர்​களின் படைப்​பாக்​கத் திறனை மேம்​படுத்​தும் வகை​யிலும், அவர்​களை படைப்​பாளி​களாக்​கும் நோக்​கிலும் ‘எழுதுக’ புத்தகம் எழுதும் இயக்​கம் சார்​பில் வாரஇறுதி நாட்​களி​லும், விடு​முறை நாட்​களி​லும் சிறப்பு பயிற்சி அளிக்​கப்​பட்​டது.

          

அவ்​வாறு பயிற்சி பெற்ற கண்​ணகி நகர் அரசு பள்ளி மாணவர்​கள் எழு​திய 50 நூல்​களை நியூ செஞ்​சுரி பதிப்​பகம் வெளி​யிட்​டுள்​ளது. அந்​நூல்​களின் வெளி​யீட்​டு​விழா கோட்​டூர்​புரம் அண்ணா நூற்​றாண்டு நூலக அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. தமிழக அரசின் முன்​னாள் தலை​மைச் செயலரும், ‘எழுதுக’ இயக்​கத்​தின் வழி​காட்​டி​யு​மான வெ.இறையன்பு கலந்​து​கொண்டு 50 நூல்​களை​யும் வெளி​யிட்​டார்.

இந்​நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது: பின்​தங்​கிய பகு​தி​யில் அரசுப் பள்ளி மாணவர்​கள் ஒரே நேரத்​தில் 50 நூல்​களை எழுதி வெளி​யிடு​வது என்​பது வரலாற்​றுச் சாதனை. கண்​ணகி நகரின் மேம்​பாட்​டுக்​காக கடந்த 2018 முதல் பல்​வேறு முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. எழுது​வது என்​பது ஒரு திறன் மட்​டுமல்ல அது ஒரு பொறுப்​பு.

நோக்கம் நிறைவேறியதில் மகிழ்ச்சி: எழுதுபவர்​கள் எழுது​வதற்கு ஏற்ப நடந்​து​கொண்​டால்​தான் சமூகம் அவர்​களுக்கு உரிய மரி​யாதையை தரும். எனவே, எழுத்​தாளர்​கள் தங்​களின் எழுத்​துக்கு ஏற்ப வாழ்​வது மிக​வும் முக்​கி​யம்.

புத்​கங்​கள் எழுதும் முயற்​சி​யில் ஈடு​பட்ட இந்த மாணவர்​களின் வாழ்க்​கை​யில் ஏற்​பட்​டுள்ள மாற்​றங்​களை​யும், தலை​மைப்​பண்​பும் முன்​முயற்​சிகள் மேற்​கொள்​ளும் திறனும் அவர்​களிடம் வளர்ந்​திருப்​பதை தலைமை ஆசிரியை குறிப்​பிட்​டார்.

அந்த வகை​யில் எந்த நோக்​கத்​துக்​காக கண்​ணகி நகரில் மாணவர்​களை புத்தகம் எழுத வைக்​கும் முயற்​சி​யில் ஈடு​பட்​டோமோ அந்த நோக்​கம் நிறைவேறி​யுள்​ளது என்​ப​தில் மிக்க மகிழ்ச்​சி.

கண்​ணகி நகரில் எதற்​காக இது​போன்ற முயற்​சிகளை மேற்​கொள்ள வேண்​டும் என்​பதை சிந்​தித்​துப் பார்க்க வேண்​டும். எந்த பள்​ளி​யிலும் மாணவர்​கள் எழு​திய இத்​தனை நூல்​கள் வெளி​யிடப்​பட்​டது இல்​லை. தமிழகம் முழு​வதும் சேர்த்து பள்ளி மாணவர்​களால் 108 நூல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

ஆனால் கண்​ணகி நகர் அரசு பள்​ளி​யில் மட்​டும் மாணவர்​களால் 50 நூல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இது​தான் சிறப்​பு. அறிவு எல்​லோருக்​கும் பொது​வானது. அது பாரம்​பரியச் சொத்து அல்ல. ஆனால், அந்த அறிவை வெளிக்​கொண்​டுவர வேண்​டும்.

அதற்கு வழி​காட்ட வேண்​டும். எழு​தி​னால் நமது கவனம் கூர்​மைப்​படும். நேரத்தை ஆக்​கப்​பூர்​வ​மாகச் செல​விட முடி​யும்.உற்​றுக் கவனிக்​கும் திறன் அதி​கரிக்​கும். தலை​மைப்​பண்பு ஏற்​படும். பார்வை தெளிவு பெறும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நியூ செஞ்​சுரி பதிப்​பகத்​தின் மேலாண் இயக்​குநர் சந்​தானம், கண்​ணகி நகர் அரசு மேல்​நிலைப்​பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்​தீஸ்​வரி, முதல் தலை​முறை அறக்​கட்​டளை நிறு​வனர் மாரி​சாமி ஆகியோர் வாழ்த்​திப் பேசினர். முன்​ன​தாக ‘எழுதுக’ இயக்​கத்​தின் ஒருங்​கிணைப்​பாளர் வே.கிள்ளி வளவன் வரவேற்​றார்.

இளைஞர்சக்தி அமைப்​பின் ஒருங்​கிணைப்​பாளர் ஜோசப் ராஜா மற்​றும் பாலச்​சந்​திரன் ஆகியோர் நோக்​க​வுரை ஆற்​றினர். நிறை​வாக ‘எழுதுக’ இயக்​கத்​தின் ஒருங்​கிணைப்​பாளர் டாக்​டர் பால​முரு​கன் நன்றி கூறி​னார். ஒருங்​கிணைப்​பாளர்​ லாவண்​யா நிகழ்ச்​சி​யை தொகுத்​து வழங்​கி​னார்​.

SCROLL FOR NEXT