சூடாமணி நினைவு அறக்கட்டளை சார்பில், சூடாமணியின் சிறுகதைகள் அடங்கிய “விருந்தினர்களில் ஒருவன்” தொகுப்பு நூல் வெளியீட்டு விழா, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ‘இந்து’ என்.ராம் நூலை வெளியிட்டார். கல்கி முன்னாள் ஆசிரியர் சீதா ரவி, எழுத்தாளர் ராஜகோபாலன், சூடாமணி நினைவு அறக்கட்டளை நிர்வாகி கே.பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

 

படம்: எஸ்.சத்தியசீலன்

இலக்கியம்

எழுத்தாளர் சூடாமணியின் 20 சிறுகதைகள் தொகுப்பான ‘விருந்தினர்களில் ஒருவன்’ நூல் வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கோட்​டூர்​புரத்​தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூல​கத்​தில் ஆர்​.சூ​டா​மணி நினைவு அறக்​கட்​டளை சார்​பில் எழுத்​தாளர் சூடமணி​யின் 20 சிறுகதைகள் அடங்​கிய தொகுப்​பான ‘விருந்​தினர்​களில் ஒரு​வன்’ நூல் வெளி​யீட்டு விழா நேற்று நடை​பெற்​றது.

இந்​நிகழ்ச்​சி​யில் தலைமை விருந்​தின​ராக ‘இந்​து’ என்​.​ராம் பங்கேற்று நூலை வெளி​யிட்​டார். மேலும் நிகழ்ச்​சி​யில் கல்கி முன்னாள் ஆசிரியர் சீதா ரவி, எழுத்​தாளர் ஜா.​ராஜகோ​பாலன் ஆகி​யோர் சிறப்பு விருந்​தினர்​களாக கலந்​து​கொண்​டனர். எழுத்தாளர் சூடா​மணி​யின் புத்​தகங்​களை மொழிபெயர்த்தவர்கள், ஓவி​யம், திரைப்​படம் போன்ற கலை வடிவம் கொடுத்​தவர்​கள் மற்​றும் பதிப்​பாளர்​கள் கவுரவிக்கப்பட்டனர்.

சென்னை உயர் நீதி​மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்​துரு, ஆர்.சூடா​மணி நினைவு அறக்​கட்​டளை நிர்​வாகி பாரதி உள்ளிட்டோர் நிகழ்​வில் பங்​கேற்​ற​னர்.

நிகழ்ச்​சி​யில் தலைமை உரை​யாற்​றிய ‘இந்​து’ என்​.​ராம் பேசியதாவது: சூடா​மணி​யின் படைப்​பு​களில் சில​வற்றை தமிழிலும், அதி​கம் ஆங்​கிலத்​தி​லும் படித்​துள்​ளேன். ஒரு ரூபாய் கூட வீணடிக்​காமல் இந்த அறக்​கட்​டளையை சிறப்​பாக நடத்தி வரு​கின்​ற​னர். இந்த அறக்​கட்​டளை உதவி​கள் செய்​வதை முதன்மை நோக்​க​மாக கொண்டு செயல்​பட்​டாலும், சூடாமணியின் படைப்​பு​களை பாது​காத்​து, இன்​றும் வாழும் எழுத்தாள​ராக சூடா​மணி இருப்​ப​தற்​கான வாய்ப்பை உருவாக்கியுள்​ளனர்.

எழுத்​தாளர் ஆர்​.கே.​நா​ராயணனுக்​கும், சூடா​மணிக்​கும் சில ஒற்றுமை​கள் உள்​ளன. இரு​வரின் எழுத்​துகளி​லும் ஆழமான கருத்துகள் இருக்​கும். சூடா​மணி உடல்​நிலை காரண​மாக அதி​கம் வெளி உலகத்தை பார்க்​காதவர். ஆனால் எப்​படி பல நுட்​ப​மான, ஆழமான கருத்​துகளை தனது எழுத்​துகளில் கொண்டு வந்​தார் என ஆச்​சரி​யத்தை ஏற்​படுத்​துகிறது.

என்னை பொறுத்​தவரை சூடா​மணி தைரிய​மான எழுத்​தாளர், பெரிய தாக்​கம் ஏற்பட வேண்​டும் என்று இல்​லாமல், தீவிர​மான கருத்​துகளை கவன​மாக கையாண்​டு, எதை​யும் மிகைப்​படுத்​தாத எழுத்​தாளர். சூடா​மணி​யின் எழுத்​துகள் நீண்ட நாட்​கள் இருக்​கும் என்ற நம்​பிக்கை எனக்கு உள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

நிகழ்ச்​சி​யில் கல்கி முன்​னாள் ஆசிரியர் சீதா ரவி பேசுகை​யில், “பெண் எழுத்​தாளர்​கள் பலர் இருந்​தா​லும் தனக்​கென தனி பாணியை கொண்​ட​வர் சூடா​மணி. பல குடும்​பங்​களின் கதைகளை உண்​மைக்கு நெருக்​க​மாக தனது எழுத்​துகளில் கொண்டு வந்​தவர். சாதாரண மணிதர்​கள்தான் அவரது கதையின் நாயகர்​கள்” என்​றார்.

தொடர்ந்து பேசிய எழுத்​தாளர் ராஜகோ​பாலன், “நவீன இலக்கியத்​தின் கருத்​துகளை வணிக இலக்​கி​யத்​தின் வடி​வில் தனது படைப்​பு​களில் கொண்டு வந்​தவர். சூடா​மணியை ஒரு குறிப்​பிட்ட இடத்​தில் மட்​டும் வைத்து பார்க்க முடி​யாது. அவரின் வாழ்க்கை ஒரு தேவதை​யின் வாழ்க்​கை, அவர் திரு​மணம் செய்துக்கொள்ளவில்​லை. ஆனால் குடும்​பங்​களின் நுட்​பங்​களை தனது எழுத்​துகளில் சிறப்​பாக வெளிப்​படுத்​தி​யுள்​ளார். மனித வாழ்​வின் அனைத்து விசித்​திரங்​களை பற்றி எழுதியவர்” என்​றார்.

SCROLL FOR NEXT