50-வது ஆண்டு பொன்விழா சென்னை புத்தக காட்சிக்கான லட்சினையை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் நேற்று வெளியிட்டார். அருகில், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலா மணி, மாவட்ட நூலக அலுவலர் எம்.கவிதா, பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலாளர் எஸ்.வயிரவன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர். |  படம்: ம.பிரபு |

 
இலக்கியம்

பபாசி பொன்விழா சென்னை புத்தகக் காட்சி ஜன.7 முதல் 19 வரை நடைபெறுகிறது

சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் இலட்சினை வெளியிட்டார்

செய்திப்பிரிவு

சென்னை: பபாசி 50-ம் ஆண்டு பொன்​விழா சென்னை புத்​தகக் காட்​சி, நந்​தனம் ஒய்​எம்​சிஏ மைதானத்​தில் அடுத்த ஆண்டு ஜன.7 முதல் 19-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இதற்​கான இலட்​சினையை சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் வெளி​யிட்​டார்.

தென்​னிந்​திய புத்தக விற்​பனை​யாளர் மற்​றும் பதிப்​பாளர் சங்​கத்​தின் (பபாசி) சார்​பில் சென்​னை​யில் ஆண்​டு​தோறும் சென்னை புத்​தகக் கண்​காட்சி நடத்​தப்​பட்டு வரு​கிறது. 2027-ம் ஆண்டு நடத்​தப்பட இருப்​பது 50-ம் ஆண்டு பொன்​விழா புத்​தகக் கண்​காட்சி ஆகும்.

இந்​நிலை​யில், 50-ம் ஆண்டு பொன்​விழா புத்​தகக் காட்​சிக்​கான இலட்​சினை (லோ​கா) வெளி​யீட்டு நிகழ்ச்சி ராயப்​பேட்டை ஒய்​எம்​சிஏ திடலில் நேற்று நடந்​தது.

இதில் சட்​டப்​பேரவை தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் கலந்​து​கொண்டு பொன்​விழா ஆண்டு சென்னை புத்​தகக் காட்​சிக்​கான இலட்​சினையை வெளி​யிட்​டார். மேலும், சென்னை புத்​தகக் காட்​சிக்​கான புதிய இணை​யதளத்​தை​யும் (www.chennaibookfair.com) தொடங்கி வைத்து அவர் பேசி​ய​தாவது: பபாசி சென்னை புத்​தகக் காட்சி நடத்​து​வதற்​கான மானிய நிதியை முதல்​வர் விஜய் ரூ.75 லட்​சத்​தில் இருந்து ரூ.1 கோடி​யாக உயர்த்தி வழங்​கியதை வரவேற்​கிறேன்.

50-ம் ஆண்டு பொன்​விழா புத்​தகக் காட்சி அடுத்த ஆண்டு ஜன.7-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நந்​தனம் ஒய்​எம்​சிஏ மைதானத்​தில் நடை​பெறுகிறது. தொலைநோக்​குப் பார்​வையோடு கடந்த 50 ஆண்டு கால​மாக இந்த புத்​தகக் காட்​சியை நடத்​து​வது பாராட்​டுக்​குரியது. இந்த நேரத்​தில் பபாசி முன்​னாள் தலை​வர்​களை​யும் நிர்​வாகி​களை​யும் நினை​வு​கூர வேண்​டியது அவசி​யம்.

வாசிப்பு பழக்​கத்தை சிறு வயதிலிருந்தே குழந்​தைகளுக்கு ஏற்​படுத்த வேண்​டும். பள்​ளி​களில் வாசிப்பு என்ற தலைப்​பில் மாணவர்​களுக்கு பேச்​சுப்​போட்​டி, கட்​டுரைப்​போட்டி நடத்தி பரிசு வழங்க வேண்​டும் என்று பபாசி அமைப்​புக்கு வேண்​டு​கோள் விடுக்​கிறேன். அதற்​கான பரிசுத் செலவை நான் ஏற்​றுக்​கொள்​கிறேன்.

எனது தொகுதி எம்​எல்ஏ அலு​வல​கம் ஆயிரம் விளக்கு பகு​தி​யில் உள்​ளது. அந்த அலு​வல​கத்​தில் ஒரு நூல​கம் அமைக்க விரும்​பு​கிறேன். எம்​எல்​ஏ-வைப் பார்க்க வரும் பொது​மக்​கள், காத்​திருக்​கும் நேரத்தை பயனுள்ள வகை​யில் கழிக்க இந்த நூல​கம் பயனுள்​ள​தாக இருக்​கும்.

இதே​போல் தமிழகத்​தில் உள்ள அனைத்து எம்​எல்​ஏ-க்​களும் தங்​கள் தொகுதி அலு​வல​கத்​தில் ஒரு நூல​கத்தை ஏற்​படுத்த வேண்​டும்.

வெளி​யிட முடி​யாத சூழலில் உள்ள தரமான புத்​தகங்​களை ஒரு குழு அமைத்து தேர்வு செய்து அதை அரசு சார்​பில் வெளி​யிடலாம்.

இதை முதல்​வரின் கவனத்​துக்கு கொண்டு செல்​வேன். இவ்​வாறு அவர் பேசி​னார். தமிழ்​நாடு பாடநூல் மற்​றும் கல்​வி​யியல் பணி​கள் கழகத் தலை​வர் லயோலா மணி பேசும்​போது, “பபாசி 50-ம் ஆண்டு பொன்​விழா சென்னை புத்​தகக் காட்சி தவெக ஆட்​சி​யில் கொண்​டாடு​வது பெருமை அளிக்​கிறது. விஜய் பயில​கம், விஜய் நூல​கம் போன்​றவற்றை 20 ஆண்​டு​களுக்கு முன்பே தொடங்​கிய​வர்​கள் நாங்​கள்.

சென்னை புத்​தகக் காட்​சிக்கு ரூ.1 கோடி மானி​யம் வேண்​டும் என்ற பபாசி கோரிக்​கையை முதல்​வர் விஜய் உடனே நிறைவேற்​றி​யிருக்​கிறார். தமிழ்​நாடு பாடநூல் கழகம் 1,300 தலைப்​பு​களில் புத்​தகங்​களை வெளி​யிட்​டிருக்​கிறது.

சட்​டப்​பேரவை தலை​வர் அமைக்​கும் தொகுதி அலு​வலக நூல​கத்​துக்கு பாடநூல் கழகம் சார்​பில் 1300 புத்​தகங்​களை வழங்க தயார்” என்​றார்.

சென்னை மாவட்ட நூலக அலு​வலர் எம்​.க​விதா பேசும்​போது, “சென்னை புத்​தகக் காட்​சி, வாசிப்பு பழக்​கத்தை மக்​களிடையே கொண்டு செல்​கிறது” என்று குறிப்​பிட்​டார்.

பபாசி முன்​னாள் தலை​வர்​கள் காந்தி கண்​ண​தாசன், சேது சொக்​கலிங்​கம், எஸ்​.வ​யிர​வன், மீனாட்சி சோமசுந்​தரம் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் கவுரவிக்​கப்​பட்​டனர்.

SCROLL FOR NEXT