சென்னைப் பேரிடரின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நேற்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், நூல் வெளியீடு, பேரிடர் நினைவுகளின் பகிர்வு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. அவற்றுடன், மனுஷ்யபுத்திரன் கடந்த மழைவெள்ளத்தின்போது எழுதிய கவிதைகளை அடிப்படையாகக் கொண்ட ‘ஊழியின் தினங்கள்’ என்ற நாடக நிகழ்வும் அரங்கேறியிருக்கிறது. தியேட்டர் லாப் வழங்கிய இந்த நாடக நிகழ்வை ஜெயராவ் இயக்கினார். கவிதையும் நாடகமும் தொடர்ந்து ஊடாடிவருவது ஆரோக்கியமான விஷயமே!