இலக்கியம்

நான் என்னென்ன வாங்கினேன்?- ஒளிப்பதிவாளர் செழியன்

செய்திப்பிரிவு

செழியனைக் கிட்டத்தட்ட புத்தகக் காட்சியின் எல்லா நாள்களிலும் பார்த்துவிட முடியும். ஆசையாக ஒரு புத்தகத்தை எடுக்கப்போனவரை இடைமறித்து, அவருடைய புத்தக வாசிப்பைப் பற்றியும் அவர் என்னென்ன வாங்கினார் என்பதையும் கேட்டோம்.

“பலரையும் போல அம்புலிமாமாவுல தான் என்னோட வாசிப்பும் ஆரம்பமாச்சு. அப்புறம் வளரவளர மத்த புத்தகங்களும் படிக்க ஆரம்பிச்சேன். சினிமாவுல முழுமூச்சா இறங்கின பிறகு, சினிமா தொடர்பான புத்தகங்கள் நிறைய படிச்சேன். ஆனாலும் இலக்கியம், அறிவியல் தொடர்பான புத்தகங்கள் வாசிக்கறது இன்னும் குறையல. ஏன்னா, அதெல்லாம் வாசிச்சாதான் என்னால உயிர்ப்போட இயங்க முடியும். வாசிப்புங்கறது ஒரு விதத்தில அப்டேட் செஞ்சிக்கிற மாதிரிதான். தொடர்ச்சியான வாசிப்பு மூலமா நான் என்னை அப்டேட் செஞ்சிக்கிறேன்.

சென்னைக்கு வந்து 16 வருஷம் ஆச்சு. இந்த 16 வருஷமும் நான் தொடர்ச்சியா எல்லாப் புத்தகக் காட்சிக்கும் வந்திருக்கேன். சிவகங்கைல இருந்தபோதும் பலமுறை சென்னைப் புத்தகக் காட்சிக்கு வந்திருக்கேன். என்னோட சென்னை வீட்டுலயும் சரி, சிவகங்கை வீட்டுலயும் சரி, நடந்தா புத்தகத்துலதான் தடுக்கி விழணும். அந்த அளவுக்குப் புத்தகங்களால் நிரம்பியது என்னோட வீடும் வாழ்க்கையும். அதே சமயம், புத்தகங்கள நான் அதிக நாள்கள் சிறைப்படுத்தியும் வைக்க மாட்டேன். நான் ஒரு புத்தகம் வாங்கினா அது எனக்காக மட்டுமல்ல என் நண்பர்கள் எல்லாருக்காகவும்தான்.

இந்த முறையும் நான் நிறைய புத்தகங்களை வாங்கினேன். வை. மு. கோ-வின் ‘கம்பராமாயணம்’, ஆல்பெர் காம்யுவின் ‘முதல் மனிதன்’, ‘ஸ்டீவன் ஹாக்கிங் வாழ்வும் பணியும்’, சி. மோகனின் ‘விந்தை மனிதனின் உருவச் சித்திரம்’, சுகுமாரனின் ‘வெல்லிங்டன்’.”

SCROLL FOR NEXT