எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், கல்கி, கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா ஆகியோரின் கதைகளை மறுபிரசுரம் செய்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகனின் முழுமையான நேர்காணல் இதில் தொகுக்கப்பட்டுள்ளது. வள்ளலாரின் 200ஆம் பிறந்த ஆண்டை முன்னிட்டு அவரைச் சிறப்புசெய்யும் பொருட்டு தனிப் பக்கங்கள் இதில் ஒதுக்கப்பட்டுள்ளன.
தின மணி தீபாவளி மலர்
பக்கங்கள்: 354, விலை: ரூ.150
சுசீந்திரம் தாணுமாலயன், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் ஆகிய இரு கோயில்களை ஒப்பிட்டு அழகான கட்டுரையைக் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் எழுதியுள்ளார். எழுத்தாளர்கள் மாலன், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், தேவிபாலா உள்ளிட்டவர்களின் சிறுகதைகளும் இதில் வாசிப்புக்குச் சுவாரசியம் அளிப்பவை.
கலைமகள் தீபாவளி மலர்
பக்கங்கள்: 228, விலை: ரூ.200
எழுத்தாளர்கள் அகிலன், அழ.வள்ளியப்பா ஆகியோரின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில், எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணனின் கட்டுரை இதில் தொகுக்கப் பட்டுள்ளது. குளச்சல் போர் குறித்தும் குலதெய்வ வழிபாடு குறித்தும் கட்டுரைகள் உள்ளன.
விஜயபாரதம் தீபாவளி மலர்
பக்கங்கள்: 386, விலை: ரூ.100
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட செயற்கைப் பஞ்சத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது. வங்கத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான பிபூதிபூஷண் பந்தோபாத்யாய தமிழில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர். இவரது சிறுகதைகள் ஏற்கெனவே மொழிபெயர்க்கப்பட்டு கவனம் பெற்றவை.
நெருங்கிவரும் இடியோசை, பிபூதிபூஷண் பந்தோபாத்யாயா, தமிழில்: சேதுபதி அருணாசலம், வெளியீடு: சுவாசம் பதிப்பகம்
விலை: ரூ.220, தொடர்புக்கு: 8148066645
உலகமே இயற்கை மருத்துவத்தின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியிருக்கிற நேரம் இது. பெரும்பான்மை மக்களும் விழிப்புணர்வு பெற்று சித்தா, ஆயுர்வேதம் என்று இயற்கை மருத்துவத்தைப் பெருமளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு இந்நூல் பெரிதும் பயனளிக்கும்!
வீட்டில் வளர்க்க வேண்டிய, சித்த மருத்துவ மூலிகைகள், டாக்டர் இ.நித்தியமாலா
வெளியீடு: சந்தியா பதிப்பகம்,
சென்னை - 600 083, விலை: ரூ.75
தொடர்புக்கு: 9444183646, 044-24896979