மும்பைச் சேர்ந்த ஸ்பாரோ இலக்கிய அமைப்பு இந்த ஆண்டுக்கான மொழிபெயர்ப்பு விருதுகளை அறிவித்துள்ளது. மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்புகள் செய்துவரும் குளச்சல் மு.யூசுப், தெலுங்கிலிருந்து மொழிபெயர்ப்புகள் செய்துவரும் கெளரி கிருபானந்தன், சீனக் கவிதைகளைத் தமிழுக்கு மொழிபெயர்த்த ஸ்ரீதரன் மதுசூதனன் ஆகியோர் இந்தாண்டுக்கான ‘ஸ்பாரோ ஆர். தியாகராஜன் மொழிபெயர்ப்பு விருது’க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆங்கிலம் அல்லாத வேற்று மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்கள் இந்த ஆண்டு பரிந்துரைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. எழுத்தாளர் அம்பை, கவிஞர் சுகுமாரன், பதிப்பாளர் கண்ணன் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு விருதுக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்துள்ளது.