1946 பிப்ரவரியில் அன்றைய பம்பாயில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கப்பற்படையில் எழுந்த கலகம் கப்பல்கள், கப்பற்படை அலுவலகங்களோடு நின்றுவிடவில்லை.
78 கப்பல் கள், 21 அலுவலகங்களில் எழுந்த காலனிய ஆட்சிக்கு எதிரான போர்க்குரல் பம்பாய் நகர வீதிகளில் மக்கள் எழுச்சியாக உருவெடுத்து இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களிலும் பரவியது.
சும்மா வந்துவிடவில்லை சுதந்திரம் என்பதை நிரூபிக்கும் வகையில் காலனிய அரசுக்கு எதிரான பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்கள் எழுச்சியின் வீச்சை, இந்திய விடுதலை யின் ஒளி மிகுந்ததொரு காலப் பகுதியை, மறு வாசிப்பு செய்ய உதவி புரிவதாக அமைகிறது வரலாற்றுப் பேராசிரியர் அநிருத் தேஷ்பாண்டே யின் இந்த நூல்.
ஹோப் அண்ட் டெஸ்பெர், ம்யூடினி, ரிபெல்லியன் அண்ட் டெத் இன் இண்டியா, 1946,
அநிருத் தேஷ்பாண்டே, ப்ரைமஸ் புக்ஸ், விராட் நகர், முகர்ஜி நகர் கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ், டெல்லி- 110 009. விலை: ரூ. 950/-