இலக்கியம்

தொடுகறி: அட்டையுமானவர்!

செய்திப்பிரிவு

அட்டையுமானவர்!

சந்தோஷ் நாராயணன் அட்டை வடிவமைப்பு தொடர்பாகப் பேசி யூடியூபில் பதிவேற்றியிருக்கும் காணொலி, வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர்களுக்கான அருமையான வகுப்புபோல வந்திருக்கிறது. ஃபேஸ்புக்கில் புத்தக அட்டை வடிவமைப்பு தொடர்பாக போகன் சங்கருக்கும் சந்தோஷ் நாராயணனுக்கும் இடையே உருவான விவாதமே வரவிருக்கும் சென்னைப் புத்தகக் காட்சிக்கான விவாதங்களின் தொடக்கமாகவும் அமைந்திருக்கிறது.

சிக்ஸ் பேக் எழுத்தாளர்கள்

சினிமாக்காரர்கள் சிக்ஸ் பேக் வைத்தால்தான் பத்திரிகைகள் கண்டுகொள்ளுமா, எழுத்தாளர்கள் சிக்ஸ் பேக் வைத்தால் கண்டுகொள்ள மாட்டார்களா என்று விசனப்பட்டிருக்கிறார் சரவண சந்திரன். விநாயக முருகன் தொடர்பாக அவர் அடித்திருக்கும் கமென்ட் இது.

மனுஷ்யபுத்திரன், பா. ராகவன் என்று பலரும் உடம்பைக் குறைத்திருக்கிறார்கள். பேலியோ டயட் வந்தாலும் வந்தது, தமிழ் எழுத்தாளர்களை யெல்லாம் விக்ரம், சூர்யா போல் ஆக்காமல் விடாதுபோல இருக்கிறது!

உடனுக்குடன் ஆங்கிலத்தில்…

எழுத்தாளர் அம்பை ஒரு முக்கியமான காரியம் செய்து வருகிறார். தமிழ்க் கவிஞர் களின் கவிதைகளை அவை எழுதப்பட்ட உடனே ஆங்கிலத் தில் மொழிபெயர்க்கிறார். சமீபத் தில் மனுஷ்யபுத்திரன், அனார் போன்றோரின் கவிதைகளை மொழிபெயர்த் திருக்கிறார். ஃபேஸ் புக்கில் பொழுதுக்கும் பிரகடனங்களும் ஒரு வரி தீர்ப்புகளும் சுயவிளம்பரங்களும் நிகழ்த்திக்கொண்டிருக்கும் பல இலக்கியவாதிகள் இப்படி ஏதாவது செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

ஒரு கவிதை ஒரு கோடி ரூபாய்!

இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்ல ரின் நாஜிப் படைகளால் சித்ரவதை முகா மில் அடைக்கப்பட்டு இறந்துபோன சிறுமி ஆன் ஃப்ராங்க், நாஜிக்கள் நிகழ்த்திய கொடூரங்களின் சாட்சியாக எழுதிய நாட்குறிப்புகளின் மூலம் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக் கிறாள். ஆன் ஃப்ராங்க் தன் கைப்பட எழுதிய கவிதையொன்றை நெதர்லாந்தின் ஹார்லெம் நகரில் ஏலம் விட்டிருக்கிறார்கள். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கு அந்தக் கவிதை ஏலம் போயிருக்கிறது.

புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா!

இந்தியர்கள் புத்தகங்களை அச்சிடவும் வெளியிடுவதற்குமான உரிமையை ஆங்கிலேய அரசு 01.08.1835-ல்தான் வழங்கி யது. அதற்கும் முன்பே எண்னற்ற தமிழ் நூல்களையும் பத்திரிகைகளையும் வெளி யிட்ட சமஸ்தானம் புதுக்கோட்டை. ஒரு காலத்தில் தமிழ்ப் பதிப்புத் துறையோடு மிக நெருக்கமான ஊராக இருந்த புதுக் கோட்டையில் மீண்டும் புத்தகத் திருவிழாக் கலாச்சாரத்துக்குத் திரும்பியிருக்கிறது.

நவம்பர் 26 தொடங்கி டிசம்பர் 4 வரை டவுன் ஹாலில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னெடுத்திருக்கும் இந்த புத்தகக் காட்சியில் மொத்தம் 27 அரங்கங்கள் இடம்பெற்றிருக்கின்றன. புத்தகக் காட்சி நடைபெறும் அரங்கத்தின் நுழைவாயில் அரு கிலேயே ‘தி இந்து’ அரங்கம் இடம்பெற்றிருக்கிறது. புதுக்கோட்டை யில் ஒரு நல்ல தொடக்கமாக இது இருக்கும் என்று நம்பலாம்!

SCROLL FOR NEXT