இலக்கியம்

கிருஷ்ணன் நிகழ்த்திய கதைகள்!

செய்திப்பிரிவு

திருப்பூர் கிருஷ்ணன் எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கியவாதி, தேர்ந்த ரசிகர். இவற்றோடுகூட நல்ல பக்தர் என்ற பரிமாணங்களின் விளைச்சல் இந்தப் புத்தகம்.

ஏழு நாட்கள் கண்ணன் தூக்கிய கோகுலத்தின் சுமேரு மலை - கலியுகத்தில் ஏழு மலையாக திருப்பதியில் அமைந்தது, அர்ச்சுனனின் ஆணவத்தைப் போக்கிய மூதாட்டி பிங்கலை, சீதையாக மாறிய ராதை, பீஷ்மரிடம் ஆசி பெற்ற திரௌபதி, குருவாயூர் கிருஷ்ணனை எருமை மாட்டு வடிவில் தியானித்த பூந்தானம், எழுதாத கடிதத்தைப் படிக்காமல் படித்த ராதை, தங்க அம்புகள் என்று தெரிந்த சம்பவங்கள் தெரியாத கதைகள் பலவற்றை எளிமையான சொல்லாடலில் நகைச்சுவையும் கதைச்சுவையும் கலந்து தந்திருக்கிறார். பக்தியும் கற்பனையும் இணையும் கதைகள் இவை!

- சாரி

கண்ணன் கதைகள்,

திருப்பூர் கிருஷ்ணன்

விலை: ரூ. 130/-

திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை 600092

044- 23771473

SCROLL FOR NEXT