சுந்தரபுத்தன் அவ்வப்போது ஃபேஸ்புக்கில் தான் பதிவு செய்த விஷயங்களை (சில அச்சாக்கமும் கண்டவை) தொகுத்துள்ளார். எண்ணங்களுக்கு வண்ணமுண்டு என்பதை நிரூபிக்கும் பதிவுகள்தான் எல்லாமே. புகைப்படங்கள் மேலான அவரது கவனக் குவிப்பைக் காட்டுகின்றன சில பதிவுகள். உதாரணத்துக்கு,
1960-ல் நேஷனல் ஜியாக்ரபிக் புகைப்பட நிபுணர் ஸ்டீவ் மெக்கரேவின் பாதிப்பில் பிரையன் பிரேக் எடுத்த, புகழ்பெற்ற வங்க நடிகை-இயக்குநர் அபர்ணா சென்னின் 16 வயது புகைப்படம் பற்றிய பதிவில் ‘மழை வாங்கி ரசிக்கும் காட்சி’என்று கவிதை நிழல் படிகிறது. தொகுப்பில் ரோமானிய புகைப்படக் கலைஞர் மிஹாலே நோரக், 37 நாடுகளில் பயணம் செய்து ‘அட்லஸ் ஆஃப் பியூட்டி’ என்ற புகைப்பட ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் என்ற தகவலுடனான ஒரு கியூபப் பெண்ணின் புகைப்படம் நம்மை வசீகரிக்கிறது.
இந்தத் தொகுப்பில் சுந்தரபுத்தன் தனது தந்தை ஒளிச்செங்கோவைப் பற்றி எழுதிய ‘பேச்சும் மூச்சும் பெரியாராக’ பதிவும் தேனுகாவைப் பற்றிய பதிவும் முக்கியமானவை.
-பாஸ்