இலக்கியம்

நவீனக் கருத்தா தீண்டாமை?

நீதி

சுந்தர் சருக்கய், ஒலிவெல், வீணா தாஸ் எனும் மூன்று ஆய்வாளர்களின் ஆய்வுகளின் பின்னணியில் பார்ப்பனர்- சாதிகள்-தீண்டப்படாதவர் உறவு என்ற ஆய்வுச் சட்டகத்தின் வழியாக ஒரு விவாதத்தை முன்வைக்கிறது இந்த நூல்.

சந்நியாசம் பெற்ற துறவியின் வாழ்முறைகள், அவரின் சமூக அந்தஸ்து, இல்லறம் நடத்துகிற கிரகஸ்தனின் சமூக நிலைகள் போன்றவை பற்றி பண்டைக் காலத்தில் நடைபெற்ற விவாதங்கள் இதில் ஆழமாக விளக்கப்படுகின்றன. சுத்தம், அசுத்தம் பற்றிய புரிதல்களும் கருத்துகளும் பலவாறாக நிலவியது பற்றிய அரிய தகவல்களையும் தருகிறார் ராமாநுஜம்.

பாசிசத்தைப் போலவே தீண்டாமையும் நவீனக் கருத்துகளின் விளைவுதான் என் கிறார் ராமாநுஜம். புத்தகத்தின் முக்கால் வாசிப் பக்கங்களில் பண்டை இந்தியா பற்றிய விளக்கமும் விவாதமும்தான். மீதிப் பக்கங்களில் திராவிட இயக்க, அம்பேத்கர் இயக்க நிலைப்பாடுகளோடு அந்த விவாதத்தை ஒப்பிட முயல்கிறார்.

சந்நியாசம் தொடர்பான தரவுகளை ஒருங் கிணைப்பதிலும் அவற்றின் பின்னணியில் விவாதிப்பதிலும் ராமாநுஜம் கூடுதல் ஆர்வம் காட்டியுள்ளார். அந்த வகையில் வரலாற்றின் இருண்ட ஒரு பகுதியில் வெளிச்சம் பாய்ச்சுகிறார்.

தத்துவ வாசகர்களுக்குச் சவாலான ஒரு வாசிப்பைத் தரும் நூல்.

SCROLL FOR NEXT