தவிப்பு, நம்பிக்கையின் இனிய துகள்களாய்ச் சிதறி விழுகிறது.
மனிதச் சிறுவர்கள், இரவினூடே யாவற்றையும் தேடிப் பிடித்தாராய்ந்து விளையாடுகின்றனர். எல்லையின்மை தவித்துத் தவித்து, சிதறியபடி ஆராய்வுக்ககப்படாது விரிந்தகல்கிறது.
இந்த இரவுகளில் சிறுவர்களின் ஆய்வுக்கருவிகள்தாம் விழித்திருக்கின்றன.
ஆய்வுக்கூடங்களில் எல்லையின்மையைச் செயற்கைக் கருப்பையில் சிறையிடுகின்றனர்.
கருவையும் நிர்மாணிக்கின்றனர். காத்திருக்கின்றனர்.
கருப்பை வெடிக்கிறது.
அழிவு.
சரித்திரம், காலம், மனிதச் சிறுவனின் நம்பிக்கைகள்…
இனிய துகள்கள் சிதறிக்கொண்டிருக்கின்றன.
(அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட ‘பிரமிள் கவிதைகள்’ புத்தகத்திலிருந்து...)