மக்களின் நியாயமான கோரிக்கைக் குரல்களுக்கு அரசு செவிசாய்க்காத போதே, அவை கலகக் குரல்களாக மாறுகின்றன. உச்சமெய்தும்போதோ அவை ஆயுதங்களை எதிர்கொள்கின்றன. கிளர்ச்சி மிக்க இத்தகைய உணர்வுகளை மடைமாற்ற வேண்டுமெனில், அரசு மக்களிடம் நெருங்கிவந்து செயல்பட வேண்டும்.
மக்கள் மீதான நம்பிக்கையோடு, அரசியல் உறுதியோடு அரசு செயல்படுமானால், அதற்கு உதவிபுரியும் வகையில் மாநிலக் காவல் துறையின் பக்குவமான செயல்பாடே அதற்குத் தேவையே தவிர, ராணுவமோ அடக்குமுறைச் சட்டங்களோ அல்ல என்பதையும், இவையேதுமின்றியே வன்முறைக் களத்தை மாற்ற முடியுமென்பதையும் திரிபுரா நிரூபித்துக் காட்டிய வரலாற்றை, தனது கள அனுபவத்தால் இந்நூலில் உறுதிப்படுத்தியிருக்கிறார் குல்தீப் குமார், ஐ.பி.எஸ்.
- வீ. பா. கணேசன்