இலக்கியம்

விடுபூக்கள்: எழுத்தாளர்கள் குறித்த சுவாரசியமான புத்தகம்

செய்திப்பிரிவு

உலகப் புகழ்பெற்ற சமகால எழுத்தாளரான ஹாருகி முராகமி, சென்ற நூற்றாண்டு எழுத்தாளர்களைப் பாதித்த ப்ரான்ஸ் காஃப்கா, இசைமேதை மோசார்ட் போன்ற கலைஞர்களின் அன்றாடம் மற்றும் வினோதமான பழக்கவழக்கங்களைப் பற்றிய புத்தகம் தான் மாசன் கரியின் ‘டெய்லி ரிச்சுவல்ஸ்'.

விக்தர் ஹியூகோ ஒரு நாளில் இரண்டு மணி நேரம் ஐஸ் குளியல் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்கிறது இப்புத்தகம். தத்துவச் சிந்தனையாளர் தெகார்த்தே, படுக்கையில் புரண்டபடியே காடுகள், தோட்டங்கள் மற்றும் அழகிய மாளிகைகளைக் கற்பனை செய்து ஆனந்தித்திருப்பாராம். மோசார்ட் தனது நண்பர்களுடன் மதிய உணவு விருந்துக்காக மட்டும் ஐந்து மணிநேரத்தைச் செலவழித்திருக்கிறார். பொதுவாகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் அனைவரும் அதிகாலை எழுபவர்களாக இருந்துள்ளனர்.

ஹாருகி முராகமி, வோல்டேர், ஜான் மில்டன் அனைவரும் அதிகாலை நான்கு மணிக்கு எழுபவர்கள். “எந்த மாற்றமும் இல்லாமல் எனது அன்றாடத்தை வைத்துள்ளேன். மனதின் ஆழ்நிலைக்குச் செல்வதற்கு அந்த ஒழுங்கு அவசியம்” என்கிறார் ஹாருகி முராகமி. “திட்டம் இல்லாமல் எந்தக் குறிக்கோளையும் நிறைவேற்ற முடியாது. எதை நம்புகிறோமோ அதில் தீவிரமாக ஈடுபட வேண்டும். வெற்றிக்கு வேறு வழியே கிடையாது” என்கிறார் பாப்லோ பிகாசோ,

SCROLL FOR NEXT