கண்ணதாசன் பதிப்பகம் 2 தொகுதிகளாக வெளியிட்டிருக்கும் எம்.ஜி.ஆரின் ‘நான் ஏன் பிறந்தேன்?’ கட்டுரைத் தொகுப்பை அண்மையில் படித்தேன். மக்கள் கொண்டாடிய திரைக்கலைஞன், ஓர் அரசியல் இயக்கத்தின் மதிப்புமிக்க தலைவன் என்கிற மதிப்பீடுகளையெல்லாம் தாண்டி எம்.ஜி.ஆர். எனும் தனிமனிதரின் துயரங்களும் போராட்டங்களும் நிறைந்த கலை வாழ்வைப் பற்றிய ஆவணம் இந்த நூல்.
மனித மனங்களில் நஞ்சை விதைக்கும் சீரழிவுக் கலாச்சாரம் மற்றும் திரைப்படங்களுக்கு எதிராக ‘ரங்கோன் மல்லிகை’ எனும் நாவலொன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். புதுச்சேரியில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து, அதன் தனித்தன்மை மிக்க பண்பாட்டுப் பின்னணியில் எழுதப்படும் இந்த நாவல் இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளிவரும்.