அண்மையில் கவிஞர் துரை. நந்தகுமார் எழுதிய ‘இதைவிட வேறில்லை’ எனும் கவிதைத் தொகுப்பைப் படித்தேன்.
நிகழ்கால வாழ்வனுபவங்களை மிகவும் அக்கறையோடு கவிதைகளில் பதிவுசெய்துள்ளார். ஒரு சொல்லும் அடுத்த சொல்லும் கோத்து நெய்யப்படும் இழை போன்ற ஒரு உணர்வுபூர்வமான நேயம் கவிதைகளெங்கும் காணக் கிடைக்கிறது.
இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகளுக்கான கதைகளை எழுதிய பின்னரும், மனசில் இன்னும் அகலாத கதைகளாய்ச் சில கதைகள் நிழலாடுகின்றன. ஆண்-பெண் மனங்களுக்குள் ஊடாடும் உளவியல் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றியவை அந்தக் கதைகள். இன்னும் தலைப்பிடப்படாத அந்தக் கதைகள் விரைவில் நூலாக வரவுள்ளன.