இலக்கியம்

இப்போது படிப்பதும் எழுதுவதும்: பா. மீனாட்சி சுந்தரம், பாடலாசிரியர்

செய்திப்பிரிவு

‘என் நூறு கிராமங்களின் பெயர்களை இரவோடு இரவாக மாற்றிவிட்டனர்’ எனும் கவிதை நூலை சமீபத்தில் படித்தேன். காஷ்மீர் கவிஞர் அக்னிசேகரின் கவிதைகளை இந்தியிலிருந்து தமிழில் ரமேஷ்குமார் மொழிபெயர்த்திருக்கிறார். அகதியான மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் அவர்களின் உணர்வுகளையும் அழுத்தமாகப் பேசும் கவிதைகள் இவை.

மயிலிறகின் மென்மையாய் வருடும் வாழ்வின் பரிபூரணத்தை அன்பின் பார்வைகளும் காதலின் முத்தங்களுமே ஆழ்மனதுக்குள் கடத்திச் சென்று ஒவ்வொரு நொடியையும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. அத்தகைய முத்தங்களை மையமாக வைத்து ‘மையல் நேரத்துத் தேநீர்’எனும் கவிதைத் தொகுப்பை எழுதி முடித்திருக்கிறேன். விரைவில் நூலாக வெளிவருகிறது.

SCROLL FOR NEXT