இலக்கியம்

இப்போது படிப்பதும், எழுதுவதும் - கவிஞர் திலகபாமா

செய்திப்பிரிவு

1921-ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட ’ஐரோப்பிய மகாயுத்தத்தில் கார்பொரல் வி.எ.அசரியா நாடார் அவர்கள் செய்த மஹாயுத்த சரித்திரச் சுருக்கம்’ என்ற நூலை சமீபத்தில் படித்தேன்.

1897-ல் சென்னை ஈக்காட்டுதாங்கலில் பிறந்த அசரியா, தனது 17-வது வயதில் கப்பல் மார்க்கமாக லண்டனில் போர்வீரனாகச் சேர்கிறார். ஐரோப்பிய யுத்தத்தில் பங்குகொண்டதோடு, அங்கே 105 வீரர்களுக்குத் தலைமையேற்ற முதல் இந்தியரும் இவரே. போர்ப் பயண அனுபவம், நாடுகளுக்கிடையேயான அன்றைய அரசியல் பார்வை எனப் பல விஷயங்களைச் சொல்லிச் செல்வதில் வியப்பேற்படுத்திய நூலிது.

தலைப்பிடாத நாவலொன்றை நான்காண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கின்றேன். பெண்ணின் காதல் அவள் இயல்பிலிருந்தே வெளிப்பட்டால் என்னவாக இருக்கும், அவள் எப்படிக் கலையில் காதலைப் பிணைக்கின்றாள், அவளது அறிவாளுமையைச் சமூகம் அல்லது எதிர்பாலினம் எப்படி எதிர்கொள்கிறது என்பதுவே மையக் கதை. கதையின் நாயகி போலவே என்னையும் காதலோடே வைத்திருக்கிறது நாவல் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

SCROLL FOR NEXT