மருத்துவத்துக்கும் காந்திக்குமான உறவையும் அதில் அவருடைய ஈடுபாட்டையும் விளக்கும் வகையில், மருத்துவத் துறை நிபுணர்கள், காந்தியர்கள் உள்ளிட்டோர் எழுதிய 20 கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன. காந்தியரும் சமூகச் செயல்பாட்டாளருமான மறைந்த மருத்துவர் வெ.ஜீவானந்தம் இந்தக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
மகாத்மாவும் மருத்துவமும்
தமிழில்: டாக்டர் வெ.ஜீவானந்தம்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை: 50
விலை: ரூ.95, தொடர்புக்கு: 044-2625 1968
18-ம் நூற்றாண்டில், சென்னை பெரம்பூரில் பிறந்து, பிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்டிருந்த புதுச்சேரியில் ஆளுநரின் துபாஷியாக 25 ஆண்டு காலம் பணியாற்றியபோது, அன்றாட நிகழ்வுகளை நாட்குறிப்பாகப் பதிவுசெய்த அனந்தரங்கப் பிள்ளையின் வாழ்க்கை, நாட்குறிப்பின் வரலாறு, அனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகளின் பதிப்பு வரலாறு, அனந்தரங்கப் பிள்ளை காலப் புதுச்சேரி ஆகியவற்றை எளிய முறையில் அறிமுகப்படுத்தும் நூல் இது.
அனந்தரங்கப் பிள்ளையும் நாட்குறிப்பும்
புதுவை நா.இராசசெல்வம்
வெளியீடு: செம்பியன் சேரன் பதிப்பகம்,
புதுச்சேரி - 605 008, விலை: ரூ.150
தொடர்புக்கு - 94860 09909
சாதனையாளர்களாக ஆவதற்கு வழிகாட்டுவதற்கான ஆலோசனைகளை ஒரு நிமிடத்துக்குள் படித்துவிடக் கூடிய கட்டுரைகளாக லேனா தமிழ்வாணன் எழுதியுள்ளார். ‘குமுதம்’ வார இதழில் தொடராக வெளிவந்த இந்தக் கட்டுரைகளில் பல சுவாரஸ்யமான தகவல்களும் ஆலோசனைகளும் கொட்டிக் கிடக்கின்றன.
நீங்களும் ஒரு நிமிட சாதனையாளர்தான்
லேனா தமிழ்வாணன்
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், சென்னை- 17
விலை: ரூ.200, தொடர்புக்கு: 91764 51934
ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியார், பாவேந்தர் பாரதிதாசன், தேவநேயப் பாவணர் உள்ளிட்ட அந்தக் காலப் புலவர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், வித்வான்கள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்புகளில் அவர்களின் இயல்பாக அவர்களின் புலமை வெளிப்பட்ட உரையாடல் தருணங்களை இந்நூலில் தொகுத்திருக்கிறார் முல்லை பிஎல்.முத்தையா.
புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்
முல்லை பிஎல்.முத்தையா
வெளியீடு: முல்லை பதிப்பகம், சென்னை - 40
விலை: ரூ.70, தொடர்புக்கு: 98403 58301
பாரம்பரியமிக்க தனியார் நிறுவனத்தில், பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் பாலாஜி வெங்கட்ராமன் எழுதிய கவிதைகளின் முதல் தொகுப்பு இது. உறவுகள், உணர்வுகள், இறைவன், இயற்கை ஆகியவை இவருடைய கவிதைகளின் முதன்மையான பேசு பொருள்களாகியிருக்கின்றன. எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் இத்தொகுப்புக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளார்.
தனிமையின் தடயங்கள்
டாக்டர் பாலாஜி வெங்கட்ராமன்
திருமோகூர், மதுரை - 625 107
விலை: ரூ.300, தொடர்புக்கு: 93452 03789
தொகுப்பு: கோபால்