இலக்கியம்

காலனியமும் இலக்கியமும்

செய்திப்பிரிவு

கன்னட எழுத்தாளர் கும். வீரபத்ரப்பாவின் மிகச் சிறந்த நாவலாக அறியப்படுவது அரண்மனை நாவல். சாகித்ய அகாடமி விருதுபெற்ற இந்நாவல், கன்னட இலக்கிய உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலனிய காலகட்டத்தை இந்நாவல் மாறுபட்ட கோணத்தில் பிரதிபலிக்கிறது.

அந்தக் காலகட்டத்தில் மிகுதியாக இருந்த அரச விசுவாசம், கும்பினி சர்க்காரின் ஆதிக்கம், மக்களின் நம்பிக்கை போக்குகள் போன்றவற்றை இந்நாவல் பேசுகிறது. இந்நாவலின் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களாக சாம்பவியையும், ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோவையும் சொல்லலாம். இதில், சுரண்டல் சமூகத்தில் பிறந்து, அதை எதிர்த்து மக்களின் நன்மைக்காகப் போராடும் பெண்களின் பிரதிநிதியாக சாம்பவி கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. தாமஸ் மன்றோ, மக்களுக்கு நன்மைகள் புரியும் சிறந்த அதிகாரியாக விளங்குகிறார். அதனால், இந்த ‘அரண்மனை’ நாவலை தாமஸ் மன்றோவுக்கு அர்ப்பணித்திருக்கிறார் கும். வீரபத்ரப்பா. சமகால கன்னட இலக்கியத்தின் வீச்சைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் படிக்க வேண்டிய சமகால நாவல் இது.

- கனி

SCROLL FOR NEXT