இலக்கியம்

புத்தகத் திருவிழா 2022 | உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

செய்திப்பிரிவு

இந்தியர்கள் மீது மகாபாரதம் அளவுக்குத் தாக்கம் செலுத்திய வேறொரு நூலைச் சொல்வது அரிது. அது ஒரு மதரீதியான படைப்பாக எஞ்சிவிடவில்லை. பிரதானமாகக் கதைசொல்லலின் சாகசமாகத்தான் மகாபாரதம் நம்முடன் உறவாடிக்கொண்டிருக்கிறது. அந்தக் கதையைச் சித்திர வடிவில் பார்ப்பதும் படிப்பதும் மகத்தான அனுபவம். அமர் சித்ர கதா நிறுவனம், சித்திரக் கதை வடிவில் வெளியிட்டிருக்கும் ‘மகாபாரதம்’ கண்ணுக்கும் கற்பனைக்கும் விருந்து. மொத்தம் மூன்று தொகுதிகளும் 1,300-க்கும் மேற்பட்ட பக்கங்களும் கொண்ட இந்தத் தொகுப்பு முழுவதும் வண்ணப் படங்களால் ஆனது. தவறவிடக் கூடாத புத்தகம்.

மகாபாரதம்
(சித்திரக் கதை)
வேத வியாசர்
அமர் சித்ர
கதா வெளியீடு
விலை: ரூ.2,199

SCROLL FOR NEXT