இலக்கியம்

புத்தகத் திருவிழா 2022 | ஆஹா! - ஆசிரியருக்கு மாணவர்களின் அரிய காணிக்கை

செய்திப்பிரிவு

பேராசிரியர் சா.பாலுசாமி சென்னை கிறித்துவக் கல்லூரி தமிழ்த் துறையின் தலைவராக செயல்பட்டு ஓய்வுபெற்றவர். கற்பித்தல் பணியைத் தாண்டி கவிஞராகவும் கலையியல் ஆய்வாளராகவும் இயங்கிவரும் அவர் தமிழ், ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை ஆகியவை குறித்து முக்கியமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

இவர் பணி ஓய்வுபெற்றதை ஒட்டி நடத்தப்பட்ட விழாவில் நிகழ்த்தப்பட்ட உரைகள் மட்டுமல்லாமல், பாரதிபுத்திரனை அறிந்த படைப்பாளிகள், ஆய்வாளர்களிடமிருந்து தமிழ் தொடர்பான கட்டுரைகள், கவிதைகளையும் பெற்று இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது. ஆசிரியராகவும் ஆய்வாளராகவும் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் அரும்பங்காற்றிய ஆளுமையை விரிவாக அறிந்துகொள்ளவும் அவரின் பணிகளுக்குச் சிறப்பான காணிக்கையாகவும் இந்த மலர் அமைந்துள்ளது.

பாரதிபுத்திரன்: வனங்களை வளர்த்துச் செல்லும் பேராறு
பதிப்பாசிரியர்கள்: பா.இரவிக்குமார், இரா.பச்சியப்பன்
தடாகம் வெளியீடு
விலை: ரூ.1,200

SCROLL FOR NEXT