போரைக் கைவிட்ட பேரரசரின் கதை
இந்திய வரலாற்றின் மகத்தான பேரரசர்களில் ஒருவரான அசோகரை எளிமையாக அறிமுகப்படுத்தும் நூல். ‘இந்து தமிழ்’ நிறுவனத்தின் ‘காமதேனு’ இணைய இதழில் தொடராக வெளிவந்து இப்போது நூல் வடிவம் கண்டுள்ளது. இந்த நூலில் அசோகர் குறித்து இதுவரை நடத்தப்பட்டுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் அவருடைய வாழ்க்கை, ஆட்சிக் காலம் குறித்து ஒரு எளிய சித்திரத்தை மருதன் தந்திருக்கிறார். போரையும், நாடு பிடிக்கும் ஆவலையும் கைவிட்டு அன்பையும் சமத்துவத்தையும் போதித்த பேரரசரையும் அவருடைய ஆட்சிக் காலம் பண்டைய இந்தியாவின் ஒளிமிகுந்த காலகட்டமாக இருந்ததையும் இந்த நூல்வழியாக அறிந்துகொள்ளலாம்.
அசோகர்:
ஒரு பேரரசரின் வாழ்வும் பண்டைய இந்தியாவின் வரலாறும்
மருதன்
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.300