சமகால இந்தியா குறித்துப் பத்திரிகையாளர் சபா நக்வி தரும் நேரடிப் பதிவுகள் இவை. இந்தியச் சமூகத்தின் சமயக் கட்டுமானத்தின் நுட்பங்களையும் சிக்கல்களையும் வெளிப்படுத்தும் எழுத்து. என்ன, எப்படி, ஏன் என்பனபோன்ற வழக்கமான இதழியல் கேள்விகளைத் தாண்டி நிகழ்வுகளின் ஊற்றுக்கண்களை ஆழமாக ஆராய்ந்து கூர்மையான பார்வையோடு முன்வைக்கிறார் சபா நக்வி. பன்முகத்தன்மை கொண்ட இந்தியச் சமூகத்தின் ஊடாட்டங்களை வரலாற்றின் பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்ள இந்நூல் உதவும். வீரசிவாஜியையும் ஷீர்டி சாய்பாபாவையும் அலசும் கட்டுரை அற்புதம்.
வாழும் நல்லிணக்கம்: அறியப்படாத இந்தியாவைத் தேடி ஒரு பயணம்
சபா நக்வி
காலச்சுவடு பதிப்பகம் (நாகர்கோவில்),
விலை ரூ.250, தொடர்புக்கு: 9677778863