தமிழ்க் கவிதையின் பேசுபொருள்களும் தளங்களும் எந்த அளவுக்கு விரிவடைந்திருக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தக் கவிதைத் தொகுப்பு. சமூகத்தின் தீண்டாமையையும் இலக்கியத்தின் தீண்டாமையையும் கத்தரித்துத் தள்ளியுள்ளன நடராஜனின் கவிதைகள். வம்சாவளியாகச் சிகை திருத்தும் கலைஞரான நடராஜன், தன் தொழில் மீது சமூகம் சுமத்திய இழிவுக்கான எதிர்வினைச் சீற்றம்தான் இந்தக் கவிதைகள். சீற்றமும் கவிதையும் ஒன்றாக இணைந்திருப்பது இந்தத் தொகுப்பை மிக முக்கியமான வரவாக ஆக்குகிறது.
ஒரு சகலகலா சவரக்காரன்
பராக் பராக்…
ப.நடராஜன் பாரதிதாஸ்
ஆதி பதிப்பகம்
விலை: ரூ.100