தமிழில் அறிவியல் புனைகதைகளின் பரப்பு மிகவும் குறைந்ததாகவே இருக்கிறது. தமிழில் இந்த வகைமையில் பெரும் சாதனை படைத்தவர் சுஜாதா. நவீன அறிவியல், தொழில்நுட்பம் போன்றவற்றைப் புனைவின் சாகசத்துடன் முன்வைத்தவை அவருடைய அறிவியல் புனைகதைகள். கூடவே, அவரது உரைநடையின் புதுப்புது சாத்தியங்களை இந்தக் கதைகளில் காணலாம். பிந்தைய தலைமுறையில் பெரும்பாலான அறிவியல் புனைகதை எழுத்தாளர்களின் ஆதர்சமாகத் திகழ்பவர் சுஜாதா. அவரது வாசகர்கள் மட்டுமின்றி அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
விஞ்ஞானச் சிறுகதைகள்
சுஜாதா
உயிர்மை பதிப்பகம்
விலை:
ரூ.540