இலக்கியம்

புத்தகத் திருவிழா 2022 | ஆஹா! - ஸ்ரீவள்ளி கவிதைகள்

செய்திப்பிரிவு

சமீபத்தில் தமிழ்க் கவிதை உலகில் பெரும் தாக்கம் ஏற்படுத்திவருபவை ஸ்ரீவள்ளி கவிதைகள். ஸ்ரீவள்ளியின் ‘பொன்கொன்றை பூக்க வந்த பேய்மழை’, ‘பொல்லாத மைனாக்கள்’ ஆகிய இரண்டு தொகுப்புகளையும் உள்ளடக்கிய இந்த நூலில், ‘திருவிருந்து’ என்ற புதிய தொகுப்பும் சேர்க்கப்பட்டிருக்கிறது. காதலின் பல்வேறு நிலைகளையும் தவிப்புகளையும் நுண்கணங்களையும் தீண்டல்களையும் இந்தக் கவிதைகள் மூலம் உணர முடியும். சங்கப் பெண்கவிகள், ஆண்டாளின் நவீனத் தொடர்ச்சியான ஸ்ரீவள்ளியின் கவிதைகள் இலக்கிய வாசகர்கள் அனைவரும் படிக்க வேண்டியவை.

ஸ்ரீவள்ளி கவிதைகள்
எழுத்துப் பிரசுரம்
விலை: ரூ.350

SCROLL FOR NEXT