மனிதர்கள் இயல்பிலே சுயநலமிக்கவர்கள், வன்முறையாளர்கள் என்று இதுவரையில் முன்வைக்கப்பட்ட பார்வைகளைக் கேள்விக்குட்படுத்துகிறது இந்தப் புத்தகம். மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள். பேரழிவுக் காலகட்டத்தில் மனிதர்களின் அடிப்படைக் குணமான மனிதமே முன்னின்றிருக்கிறது என்பதை இப்புத்தகம் தர்க்கபூர்வமாக முன்வைக்கிறது.
மனிதர்களைச் சுயநலமிக்கவர்கள், வன்முறையாளர்கள் என்று நிரூபிக்கும் வகையில் கடந்த நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை எடுத்துக்கொண்டு, அந்த ஆய்வுகளின் உருவாக்கத்தில் இருக்கும் பிழைகளையும் உள்நோக்கங்களையும் ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர்.
மனிதகுலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு
ருட்கர் பிரெக்மன்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
மஞ்சுள் பதிப்பகம்
விலை: ரூ.599