அலெக்ஸ் ஹேலி ஆங்கிலத்தில் எழுதிய ‘வேர்கள்’ என்ற நாவலைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் பொன். சின்னத்தம்பி முருகேசன். ஹேலி தனது பூர்வீக நாடான ஆப்பிரிக்காவின் கம்பியா பகுதியிலுள்ள கிராமத்தில், மக்கள் வழக்கில் இருந்த நாட்டுப்புறப் பாடல்களையும் கதைகளையும் ஆதாரமாகக் கொண்டு, ஒரு இனக்குழுவினரின் ஏழு தலைமுறை வாழ்க்கையை ஆவணப்படுத்தியுள்ளார். வாசிக்கும்போது, கி.ரா-வின் ‘கோபல்ல கிராமம்’ நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
சமூக நிர்ப்பந்தத்தால் ஒருவரைக் கொன்றுவிட்டு, போலீசுக்குப் பயந்து காடுகளிலும் மலைகளிலும் தலைமறைவு வாழ்வை மேற்கொண்ட கிராமத்து இளைஞன் ஒருவனின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு நாவலொன்றை எழுதிவருகிறேன். உணவு, உறைவிடம், உடைகளுக்காக அவன் படுகிற பாடுகளைக் காட்டு வாழ்வின் பண்பாட்டுடன் பதிவுசெய்ய முயன்றுள்ளேன். நாவலின் தலைப்பு: மறைந்து திரிந்த மனிதன்.