இலக்கியம்

இப்போது படிப்பதும் எழுதுவதும்: சுப்ரபாரதி மணியன்

செய்திப்பிரிவு

அண்டனூர் சுரா எழுதிய ‘திற’ சிறுகதைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். திருநங்கைகள், முஸ்லீம்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைச் சித்திரங்களை சிறப்பாகத் தனது கதைகளில் பதிவுசெய்துள்ளார் நூலாசிரியர். சாதிச் சான்று பெறுவதற்காகத் தன் பெற்றோரை வற்புறுத்தும் சிறுமியையும், அதில் அக்கறை எடுத்துக்கொள்ளாத பெற்றோர்களையும் பற்றிய சிறுகதை மனதைத் தொடுகிறது.

திருப்பூரில் இப்போது பின்னலாடைத் துறையில் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடைபெறுகிறது. இந்த பின்னலாடைப் பணிகளில் நைஜீரிய மக்கள் அதிக அளவில் பணி செய்கிறார்கள். இவர்கள் உள்ளூர் மக்களிடம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி ஒரு நாவல் எழுதிவருகிறேன். நைஜீரிய நாட்டு மக்கள் பணத்தை அழைக்கும் ‘நைரா’ என்ற பெயரிலேயே நாவலையும் எழுதிவருகிறேன்.

SCROLL FOR NEXT