இந்திய-ரஷ்ய கூட்டுத் தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணையின் தந்தை என்று அழைக்கப்படுபவரும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தைத் தொடங்கியவருமான அறிவியலாளர் ஏ.சிவதாணுப்பிள்ளை, முன்னாள் குடியரஇந்திய சுத் தலைவரும் இளைஞர்கள் பலரால் போற்றுதலுக்குரிய ஆளுமையாகக் கருதப்படுபவருமான டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் உடனான தன்னுடைய அனுபவங்களை இந்த நூலில் தொகுத்தளித்துள்ளார். பிரம்மோஸ் ஏவுகணைத் திட்டம் உட்பட இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ), பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) ஆகியவற்றின் பல்வேறு திட்டப் பணிகளில் கலாமுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் சிவதாணுப் பிள்ளை.
கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது, பிரம்மோஸ் திட்டத்தை முன்னிட்டு கிட்டத்தட்ட தினமும் அவருடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்றிருந்ததாக நூலின் முன்னுரையில் பதிவுசெய்துள்ளார். தன்னுடைய ஆசிரியர் என்றும் இந்தியாவின் தகுதிமிக்க குடிமகனாகத் தன்னை வடிவமைத்தவர் என்றும் கலாமை நெகிழ்ச்சியுடன் குறிப்பிடும் சிவதாணுப் பிள்ளை, கலாமுடன் பணி நிமித்தமும் தனிப்பட்ட முறையிலும் பழகிய 40 ஆண்டு கால அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்துள்ளார். அதன் வழியே கலாமைப் பற்றியும் இந்திய விண்வெளித் திட்டங்கள், ஆயுத உற்பத்தி ஆகியவற்றில் இந்தியா அடைந்திருக்கும் வியக்கத்தக்க முன்னேற்றங்களில் கலாமின் ஒப்பற்ற பங்களிப்புகள் குறித்தும் இதுவரை சொல்லப்படாத பல கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் கலாமை மேலும் நெருக்கமாக அறிந்துகொள்வதற்கான இன்னொரு முக்கிய வரவு இந்த நூல்.
- கோபால்
40 YEARS WITH
ABDUL KALAM
UNTOLD STORIES
A.SIVATHANU PILLAI
வெளியீடு
பெண்டகன் பிரெஸ் எல்.எல்.பி
புது டெல்லி - 110049
தொலைபேசி -
011-64706243, 26491568
மின்னஞ்சல் -
rajan@pentagonpress.in