இலக்கியம்

எண்கள் நம் கண்கள்

ஆசை

நவீன அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பலதுறை களைப் பற்றியும் தமிழில் சுயமான புத்தகங்கள் இல்லை என்ற குறை நெடுங்காலமாக இருக்கிறது. தமிழில் அறிவியல் குறித்து எழுதியவர்களில் சுஜாதா ஒரு நல்ல முன்னோடி. அவருக்குப் பிறகும் ஒருசில முயற்சிகள் நடந்துவருவது சற்றே நம்பிக்கை அளிக்கிறது. ரோகிணி ஜெகந்நாதன் எழுதிய ‘எண்களின் வரலாறு’ அப்படிப்பட்ட முயற்சிகளுள் ஒன்று. கணக்கு என்றாலே காததூரம் ஓடுபவர்களையும் இழுத்துவைத்து சுவாரசியமாகப் படிக்க வைக்கும் நூல் இது. எண்களின் தோற்றம், பரிணாமம், கலாச்சார முக்கியத்துவம் என்று பல அம்சங்களையும் விவரிக்கும் இந்த நூல் ஒவ்வொரு மாணவரிடமும் இருக்க வேண்டியது.

SCROLL FOR NEXT