இலக்கியம்

நம் வெளியீடு: பன்முக வாழ்க்கை

செய்திப்பிரிவு

‘சித்திரச் சோலை’ நூலைப் படிக்கும்போது ஒரு பன்முகக் கலைஞரின் வாழ்வு எப்படி ரத்தமும் சதையுமாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டுப்போவீர்கள். ஓவியர், நடிகர் என்ற இரு அம்சங்களில், இரு வேறு கோணங்களில் தன் ஒட்டுமொத்த அனுபவங்களையும் ‘சித்திரச் சோலை’யில் சிவகுமார் வடித்துள்ளார். மிகச் சிறந்த மனிதர், மார்க்கண்டேயர் என்றெல்லாம் அவர் புகழப்படுவதன் சூட்சுமம் அவரது சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பதிலும், அளவிட்டு அறிய முடியாத ஒரு கலை உணர்வு எப்போதும் அவரை உயிர்ப்புடனும் விழிப்புடனும் வைத்திருப்பதிலும்தான் இருக்கிறது என்பதை இந்நூலின் மூலம் புரிந்துகொள்ளலாம்.

சித்திரச் சோலை,
சிவகுமார்
வெளியீடு: ‘இந்து
தமிழ் திசை’
விலை: ரூ.285
தொடர்புக்கு: 74012 96562
ஆன்லைனில் பெற:
store.hindutamil.in/publications

SCROLL FOR NEXT