இந்தியர்களின் விவசாய அறிவையும் உழைப்பையும் பயன்படுத்த நினைத்த ஆங்கிலேயர்கள் பல்வேறு நாடுகளுக்கு அவர்களைக் கொத்தடிமைகளாகக் கொண்டு சென்றனர். பஞ்சம் பிழைக்கச் செல்வதாக நினைத்துச் சென்ற மக்கள் அனுபவித்த துன்பங்கள் முடிவில்லாத தொடர்கதைகள். அவற்றில் இலங்கை மலையகத் தமிழர்களின் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் செ. கணேசலிங்கன். அவரது குடும்பத்தின் அனுபவங்களும் இதில் அடங்கும். 150 ஆண்டுகாலம் அடிமை வாழ்வில் அழுத்தப்பட்ட சமூகத்தின் நினைவுகளின் ஓவியம் இந்த நூல். -நீதி
இலங்கைத் தேயிலைத் தோட்ட அனுபவங்கள்
செ.கணேசலிங்கன் விலை: ரூ. 60
வெளியீடு: குமரன் பப்ளிஷர்ஸ்
12/3, மெய்கை விநாயகர் தெரு,
குமரன் காலனி 7வது தெரு,
வடபழனி. சென்னை- 600 026.
பல வண்ணங்களின் தேசம்
‘பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்’ என்ற குரல் யாரிடமிருந்து அதிகம் வருகிறது என்பதைப் பார்த்தாலே இதன் மூலம் யார் குறிவைக்கப்படுகிறார்கள் என்பது தெரிந்துவிடும். முஸ்லீம்கள்தான் இந்தக் கோரிக்கையாளர்களின் இலக்கு. பல மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள் கொண்ட இந்த தேசத்தை ஒற்றை வண்ண தேசமாக ஆக்கிவிடத் துடிப்பவர்களின் கோரிக்கைதான் ‘பொது சிவில் சட்டம்’. விடுதலைப் போராட்ட வீரரும் கவிஞருமான கா.மு. ஷெரீப், பொது சிவில் சட்டம் என்பது இந்தியப் பன்மைக் கலாச்சாரத்துக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை எண்பதுகளிலேயே எழுதி வெளியிட்ட இந்த நூலின் புதிய பதிப்பு இது.
பொதுச்சிவில் சட்டம் பொருந்துமா?
கவி. கா.மு. ஷெரீப்
விலை: ரூ. 50
வெளியீடு: கலாம் பதிப்பகம், மயிலாப்பூர்,
சென்னை-04. கைபேசி: 94440 25000.
-தம்பி