“மனிதன் எந்திரகதியில் இயங்கும் சக்திகளை அவனுடைய அறிவாற்றலின் மூலம் தனது நோக்கங்களை நிறைவேற்றப் பயன்படுத்துகின்ற பொழுது அவனைப் படைத்த இறைவனுக்கு மிகவும் அருகில் வருகின்றான். அதனை அழிவு இன்றி ஆக்கம் கிடைக்கிம் வகையில் செய்கின்ற பொழுது அவன் மிகவும் நெருக்கமாக இயற்கையின் வழியைப் பின்பற்ற வேண்டும்” என்று சொன்ன காந்தியப் பொருளாதார அறிஞர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக்களின் தொகுப்பு இந்த நூல்.
டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக் களஞ்சியம்
மா. பா. குருசாமி விலை: ரூ. 300
வெளியீடு: சர்வோதய இலக்கியப் பண்ணை,
மதுரை-01 தொடர்புக்கு: 0452- 2341746
மின்னஞ்சல்: spimadurai@yahoo.com
-ஆபி
மொழிப்போர் சுவடுகள்…
மொழி உணர்வாளர்கள், தமிழறிஞர்கள், மாணவர்கள் என அனைவரையும் களமிறங்க வைத்தது மொழிப் போராட்டம். 1965-ல் மொழிப் போராட்டம் வீறுகொண்டு நடைபெற்றாலும், 1938-களிலேயே இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடங்கிவிட்டது. மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த சென்னை நடராஜன் தொடங்கி, கல்லூரி மாணவர் ராஜேந்திரன் வரை 12 மொழிப்போர் தியாகிகளின் படங்களோடு, சுருக்கமான வாழ்க்கை வரலாற்றையும்,மொழிப்போர் வரலாற்றையும் இணைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த நூல்.
-மு.மு
மொழிப்போர் ஒரு வரலாறு,
கவிஞர் சாவல்பூண்டி சுந்தரேசன்
விலை: ரூ.20/- வெளியீடு: சத்யா பதிப்பகம்,
திருவண்ணாமலை 606 601.
தொடர்புக்கு: 94436 85882.