‘ஒரு ஊர்ல…’ என்று ஆரம்பித்தாலே போதும்; கண்ணையும் காதையும் அகல விரித்தபடி ஆர்வமாய்க் கதை கேட்க உட்கார்ந்து விடுவார்கள் குழந்தைகள். வீடுகளில் குழந்தைகளுக்குக் கதை சொன்ன தாத்தா, பாட்டிகளெல்லாம் இப்போது தொலைக் காட்சித் தொடர்களின் கதைகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.
குழந்தைகளுக்கான கதைகள் உலகின் திசையெங்கிலும் பரவிக் கிடக்கின்றன. ஆப்பிரிக்க, அமெரிக்க, ரஷ்ய, பைலோ ருஷ்ய நாடுகளைச் சேர்ந்த குழந்தை களுக்கான கதைகளை ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்த்து, ‘முஃபாரோவின் அழகிய மகள்கள்’ எனும் நூலாகத் தந்திருக்கிறார் முத்தையா வெள்ளையன்.
மரம் வெட்டியும் தங்க ஊசியும் கதையும், முஃபாரோவின் அழகிய மகள்கள் கதையும் நாம் சிறுவயதில் கேட்ட / படித்த தமிழ்க் கதைகளுக்கு மிக நெருக்கமாக வருகின்றன. குழந்தைகள் எடுத்ததும் படிக்கத் தூண்டும் வகையில் சிறிய சிறிய பத்திகளுடன், அழகான படங்களுடன் வெளிவந்துள்ள இந்நூல் குழந்தைகளுக்கு வாசிக்கக் கிடைத்த அழகிய பொக்கிஷம் எனலாம்.
- மு. முருகேஷ்
முஃபாரோவின் அழகிய மகள்கள்
தமிழில்: முத்தையா வெள்ளையன்
விலை : ரூ.70/-
மேன்மை வெளியீடு
சென்னை 600 014
தொடர்புக்கு: 94449 03558.