இலக்கியம்

இப்போது படிப்பதும் எழுதுவதும் - செ.வீரபாண்டியன், எழுத்தாளர்

செய்திப்பிரிவு

இந்திரன் எழுதிய ‘மிக அருகில் கடல்’ கவிதை நூலைச் சமீபத்தில் படித்தேன். பிறவிப் பெருங்கடலை தமிழ் மண்ணில் நீந்த முடியாமல், பாண்டிச்சேரி கடலிலிருந்து கரை கடந்த தமிழர்களின் நீட்சியை கொதுலுப் தீவில் கண்ணுற்ற கவிஞரது ஆற்றாமை இந்நூலில் கவிதைகளாய் வெளிப்பட்டுள்ளது. இந்நூலை உட்கொண்ட என் வாசிப்பின் அந்தரங்கச் சிந்தனைக்கு அருகே வந்துவந்து போகின்றன இந்தக் கடல் கவிதைகள். இன்னுங்கூட இந்திர இதயம் வெளிப்படுத்துவற்கான கால இடைவெளியை சுமந்து நிற்கும் கவிதைகளின் தேர்ந்த தொகுப்பிது.

எனது ‘பருக்கை’ நாவல் வெளியான பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நான் எழுதிய 10 சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றினைத் தொகுத்துவருகிறேன். கிராம மற்றும் நகர வாழ்வில் ஏற்படும் வாழ்க்கைப் போராட்டங்களே எனது கதைகளின் மையப்புள்ளியாக உள்ளது. விரைவில் வெளிவரவிருக்கும் இத்தொகுப்புக்கு ‘செத்தை’ என்று பெயரிட்டுள்ளேன்.

SCROLL FOR NEXT