இலக்கியம்

இப்போது படிப்பதும் எழுதுவதும்: எழுத்தாளர் சிவகுமார் முத்தய்யா

செய்திப்பிரிவு

சுந்தரபுத்தன் எழுதிய ‘மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு’ எனும் கட்டுரைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்துவிட்ட சூழலில் இளம் வயதில் வாழ்ந்த கிராமத்து வாழ்க்கை அனுபவங்கள் அழுத்தமான பதிவுகளாக உயிர் கொண்டுள்ளன. மத்திய தர வாழ்வின் சாயலைச் சிறிதும் சுமந்திராத அசல் கிராமத்து மனிதனின் மனநிலை, நகரத்துச் சூழலிலும் இன்னும் நசிந்து போகாமல் இருப்பதற்கான ஆதாரமாய் உள்ளன இந்நூலின் கட்டுரைகள்.

சமீபத்தில் பல்வேறு இதழ்களில் வெளியான எனது 14 சிறுகதைகள் கொண்ட நூலொன்றைத் தொகுத்துவருகிறேன். தஞ்சை வட்டார கிராம மக்களின் குறிப்பாக, அடித்தட்டு மக்களின் மறைக்கப்பட்ட வாழ்க்கை நெறிகளையும், வாழ்க்கைப் போராட்டங்களையும் எனது கதைகளின் மையப்புள்ளியாகக் கொண்டு எழுதியுள்ளேன். ‘செங்குருதியில் உறங்கும் இசை’ என்ற தலைப்பில் இந்நூலை, சாந்தி பப்ளிகேஷன் வெளியிடவுள்ளது.

SCROLL FOR NEXT