இலக்கியம்

கணினியில் தமிழ் தட்டச்சு

செய்திப்பிரிவு

அச்சுப்பணி, தகவல் தொழில்நுட்பம் என்னும் இரண்டுக்கும் உதவும் கணினி, அலைபேசி, இணையம் எனப் பல ஊடகங்களிலும் செயல்படும் முக்கியக் கருவியான தமிழ் மென்பொருள்கள் குறித்த பல கருத்துகளை விளக்கு வதாக இந்நூல் உருவாக்கப் பட்டுள்ளது.

இந்நூல் மூன்று இயல் களைக் கொண்டுள்ளது. தமிழ் மென்பொருள்களுக்கு அடிப்படையான எழுத்துரு (Font), குறியீட்டாக்கம் (Enco ding), விசைப் பலகை (Keyboard) குறித்தும் இம்மூன்று அடிப் படைக் கூறுகளுக்கான ஒருங் குறி (Unicode) பங்களிப்பு குறித் தும் விரிவான பல கருத்துகள் ஆராயப்பட்டுள்ளன.

கணினியைத் தமிழில் இயங்கவைக்கும் தமிழ் மென் பொருள்களின் அவசியம், உரு வாக்கம், பயன்பாடு குறித்து விரிவான செய்திகள் தரப்பட் டுள்ளன. இந்நூல் தமிழ் மொழி வளர்ச்சியில் தமிழ் மென் பொருள்களின் பங்களிப்பை விளக்குகிறது.

தமிழ் மென்பொருள்கள் குறித்து எளிய நடையில் அனை வருக்கும் விளங்கும் வகை யில் இந்நூல் உருவாக்கப்பட் டுள்ளது. இந்நூலின் வழி பல்வேறு எழுத்துரு (Font) உருவாக்கங்களால் ஏற்படும் சிக்கல்களை அறிய முடிகிறது. தமிழ் பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் உருவாகியுள்ள பல்வேறு மென்பொருள்கள் குறித்தும் அவற்றின் உருவாக் கத்தில் ஏற்படும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது, அவற்றை மேம்படுத்துவது குறித்துமான பல விரிவான கருத்துகளை இந்நூல் ஆராய்ந் துள்ளது.

தமிழ் மென்பொருள்கள்

முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன்

வெளியீடு: நோக்கு, 259 நேரு நகர், 2-வது முதன்மைச் சாலை

சென்னை-96 கைபேசி: 9380626448

விலை: ரூ.125

SCROLL FOR NEXT