இணையத்தில் விரியும் கி.ரா. படைப்புலகு
கி.ரா.வின் மறைவையொட்டி பகிர்ந்துகொள்ளப்பட்ட நினைவுக் குறிப்புகளில் பெரும் பகுதி புதுவை இளவேனில் எடுத்த புகைப்படங்களோடுதான் வெளியாகின. தனது கேமராவால் கி.ரா.வை ஆயிரக்கணக்கில் புகைப்படங்கள் எடுத்தவர் இளவேனில். ‘இடைசெவல்’ என்ற தலைப்பில் அவர் எடுத்த விவரணப்படம் கி.ரா.வின் பால்ய நாட்கள், இசைப் பயிற்சி, எழுத்துலகப் பிரவேசம், பல்கலைக்கழகப் பேராசிரியராக அவரது பங்களிப்புகள், சினிமாவுக்கு வந்த அவரது கதைகள் என்று பல்வேறு புள்ளிகளில் காட்சிக் கோலமிட்டது. தற்போது கி.ரா.வுக்காக ஒரு இணையதளத்தையும் (https://www.kirajanarayanan.com/) புதுவை இளவேனில் உருவாக்கிக்கொண்டிருக்கிறார். கி.ரா. எழுதிய கதைகள், கட்டுரைகள், அவரைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள், புகைப்படங்கள், காணொளிகள் என்று கி.ரா. வாசகர்களுக்கான முழுமையான ஒரு கருவூலத்துக்கான முயற்சி இது.
ஆவணப்படத்தைக் காண: https://www.youtube.com/watch?v=W99Udf44l48
***********************************
கி.ரா. நினைவுகளின் பெருந்தொகுப்பு
கி.ரா.வின் மறைவையொட்டி நினைவு மலர் ஒன்றைக் கொண்டுவரும் முயற்சியை முன்னெடுத்திருக்கிறார் வழக்கறிஞரும் ‘கதைசொல்லி’ இதழின் இணையாசிரியருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன். கி.ரா.வின் படைப்பாளுமையையும் படைப்புலகையும் படைப்பு மொழியையும் குறித்த படைப்பாளர்கள், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், ஆய்வாளர்களின் கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெறவுள்ளன. கட்டுரைகள் அதிகபட்சம் 10 பக்கங்களுக்கு மிகாமல் யூனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டு கட்டுரையாளரின் செல்பேசி உள்ளிட்ட முகவரியுடன் ஜூன் 30-க்குள் அனுப்பப்பட வேண்டும். இந்த நினைவுமலரை ஓவியர் மாரீஸ், பேராசிரியர் நா.சுலோசனா இருவரும் ஒருங்கமைக்கவுள்ளனர்.
கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: rkkurunji@gmail.com, drsulochanaiits@gmail.com
********************************************************
‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’,‘மாபெரும் தமிழ்க் கனவு’ சிறப்புச் சலுகை
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக மே 29 முதல் ஜூன் 6 வரை சிறப்புச் சலுகை விற்பனையை அறிவித்திருக்கிறது ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம். கருணாநிதியின் வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ இரண்டு நூல்களையும் 20% தள்ளுபடி விலையில் வாங்கிக்கொள்ளலாம்.
புத்தகம் வாங்குவதற்கான இணையதளச் சுட்டி: store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 74012 96562/ 7401329402