இலக்கியம்

இப்போது படிப்பதும் எழுதுவதும்: மதுமிதா, கவிஞர் மொழிபெயர்ப்பாளர்

செய்திப்பிரிவு

எம்.ஆர்.எம். அப்துற்-றஹீமின் ‘இறைத்தூதர் முஹம்மத்’ நூலை சமீபத்தில் படித்தேன். அந்தக் காலத்தின் வாழ்வியல், சமூகவியல் நடைமுறைகளைப் பற்றி அறிந்துகொள்ள ஏராளமான பதிவுகள் இந்நூலில் உள்ளன. நபிகள் நாயகத்தின் அருங்குணங்களையும், கதீஜா அம்மையாரின் பேரன்பையும் அறிந்துகொண்டேன். சாத்தான்குளம் அப்துல் ஜப்பாரின் தெளிவான, எளிய மொழிபெயர்ப்பும், இஸ்லாமியத் தமிழின் வளமும் மிகவும் பிடித்திருந்தது.

தெலுங்கு மொழியின் குறிப்பிடத் தக்க எழுத்தாளரான பெத்தி பொட்ல சுப்பராமய்யாவின் கதைகளைத் தெலுங்கிலிருந்து தமிழாக்கம் செய்துகொண்டிருக்கிறேன். சாகித்ய அகாதமி விருதைப் பெற்ற ‘பெத்தி பொட்ல சுப்பராமய்யா கதைகள் (பாகம்-1)’ நூலில் 34 சிறுகதைகள் உள்ளன. இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உலகமாய் விரிகிறது. ஏழைகள், நடுத்தர மக்கள், பெண்கள் என அனைவரையும் தனது கதையின் நாயகர்களாக்கியுள்ளார் சுப்பராமய்யா.

SCROLL FOR NEXT