ஆரம்ப கால கம்யூனிச இயக்கத் தலைவர்களில் ஒருவர் ஏ.எஸ்.கே. ஆவியூர் சீனிவாச அய்யங்கார் கிருஷ்ணமாச்சாரி என்பது அவரது இயற்பெயர். பெரியார் மீதும் அம்பேத்கர் மீதும் மரியாதை கொண்டவர். அவர்களைப் பற்றி புத்தகங்களும் எழுதியுள்ளார்.
இந்த நூலில் அம்பேத்கரின் வாழ்வும் பணிகளும் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளன. தலித் மக்களின் பிரச்சினைகளும் சமூக அக்கறையோடு விவாதிக்கப்பட்டுள்ளது. தலித் மக்கள் என்றார் யார்? அவர்கள் எங்கெங்கு எப்படி வாழ்கின்றனர். எத்தனை சாதிகளாகப் பிரிந்துகிடக்கின்றனர் என்பன உள்ளிட்ட பல விவரங்களும் இதில் உள்ளன. நூலின் இறுதியில் ஆசிரியர் தான் ஏற்றுக்கொண்ட கம்யூனிசக் கருத்துகளால்தான் சமத்துவ சமூகம் ஏற்படும். தீண்டாமையும் ஏற்றத்தாழ்வுகளும் ஒழியும் என்கிறார்.
அம்பேத்கரின் சம காலத்தவர் எழுதியது என்பதாலும், அதைவிட முக்கியமாக கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் எழுதியது என்பதாலும் இந்த நூல் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், தற்போதைய பதிப்பில் ஏ.எஸ்.கே பற்றிய வரலாற்றுக் குறிப்போ, முதல் பதிப்பு பற்றிய விவரங்களோ இல்லாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
டாக்டர். அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்
ஏ.எஸ்.கே, விலை-145.
பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை- 14.
தொடர்புக்கு: 044-28482441.
மின்னஞ்சல்: pavai123@yahoo.com