ஆசிரியர் பற்றி
சிறுவர் இலக்கியத்துக்காக 2014-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவர் ஆயிஷா இரா.நடராசன். இயற்பியல்,கல்வி மேலாண்மை, உளவியலில் முதுகலைப்பட்டம் பெற்றவர். பள்ளியாசிரியராகப் பணியாற்றிக்கொண்டே சிறுவர்களுக்கான பல்வேறு அறிவியல் நூல்களை எழுதியுள்ளார். எளிமையும் நகைச்சுவையும் கலந்து எழுதப்பட்டவை இவரது நூல்கள்.
நூலைப் பற்றி
ஒளி குறித்த அறிவியல் பார்வையை இந்த நூல் விசாலமாக்குகிறது. மாணவ, மாணவியர், ஆசிரியர் பெருமக்கள் மட்டுமல்லாமல் பள்ளியில் படிக்கும்போது அறிவியல் என்றாலே அறுவை என்று ஓடியவர் கூட விரும்பிப் படிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
‘ஒளி எனும் உத்தம வில்லன்’ ‘அலை எனும் அப்பாடக்கர்’ ‘உலக நாயகன்+ சூப்பர் ஸ்டார்= ஒளி’ ஆகிய தலைப்புகளே அவர் அறிவியலை சாதாரணமாக மக்களிடம் புழங்கும் சொற்களைக் கொண்டு சொல்ல முயன்றுள்ளார் என்பதை விளக்கும். அறிவியல் தாகம் கொண்டவருக்கு இந்த நூல் ஒரு குளிர்பானம்.
- நீதிராஜன்
ஒளியின் சுருக்கமான வரலாறு
ஆசிரியர்- ஆயிஷா இரா. நடராசன்
விலை: ரூ.70.
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
சென்னை -600 018.
தொடர்புக்கு: 044- 2433 2924.